இந்த படத்தில் ஒரு 'டெலிபோன்' இருக்கு.. 7 செகண்டில் கண்டுபிடித்தீர்கள் என்றால்.. நீங்க ஜீனியஸ் தான்!
டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் ஏராளமான பொருட்கள் வீட்டில் சிதறி கிடக்கின்றன. இந்த பொருட்களுக்கு மத்தியில் தொலைபேசி ஒன்றும் இருக்கிறது. 7 செகண்டுக்குள் இந்த தொலைபேசியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்..
எப்போதும் பரபரப்பாக இருந்து விட்டு ஓய்வு நேரத்தையும் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என விரும்புவர்களுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சாய்ஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனெனில், இத்தகைய படங்களில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டுபிடிப்பது சவாலானது என்பதால் சாவலை ஏற்றுக்கொண்டு நெட்டிசன்கள் பலரும் விடையை கண்டுபிடித்து அசத்த வேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர்.

கண்களை ஏமாற்றும் படங்கள்
இதனால், இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் தனி வரவேற்பு இருக்கிறது என்றே சொல்லலாம். சில இல்யூஷன் படங்கள் நமது கண்களையே ஏமாற்றும் வித்தைகளை கொண்டது. சில இல்யூஷன் படங்கள் பார்ப்பவரின் புத்திக்கூர்மை, அறிவுத்திறன் உள்ளிட்டவற்றையும் ஓரளவு கணிக்கும் வகையில் இருக்கிறது என்றே சொல்லப்படுகிறது.

ஆப்டிகல் படம்
இதனால், இப்போதெல்லாம் சில தேர்வுகளில் கூட இத்தகைய இல்யூஷன் படங்களை காட்டி மறைந்து இருக்கும் வித்தியாசங்களை கண்டுபிடிக்க சொல்ல வைப்பதாகவும் கூறப்படுகிறது . சில நாளிதழ்கள் படத்தில் உள்ள 10 வித்தியாசங்களை கண்டுபிடிக்குமாறு கூறி வெளியிடும் படங்கள் கூட இத்தகைய இல்யூஷன் படத்தின் வகையை சார்ந்ததே. அந்த வகையில்தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.

7 செகண்டுகள்..
உங்கள் கண்களுக்கான டெஸ்ட் போல அமைந்து இருக்கும் இல்யூஷன் படத்தில் மறைந்து இருக்கும் ஒரு பொருளை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால். அதற்காக மணிக்கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெறும் 7 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா? சரி எதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறோம்..

இரண்டு குழந்தைகள்
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் ஒரு அறையில் தம்பதிகள் தங்கள் இரு குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பொம்மைகளுடன் உற்சாகமாக விளையாடி வருகின்றனர். அந்த அறை முழுவதும் வெறும் பொம்மைகளாக நிரம்பிக் கிடக்கின்றன. இந்த அறையில் ஒரு டெலிபோனும் உள்ளது. அதை கண்டுப்பிடிப்பதுதான் உங்களுக்கான இன்றைய டாஸ்க்.. அதுவும் 7 செகண்டுகள்..

டெலிபோன் எங்கே இருக்கிறது
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... சில வினாடிகள்தான் இருக்கு... சீக்கிரம் கண்டுபிடிங்க... ஒகே டைம்ஸ் அப். பலரும் இந்த படத்தில் டெலிபோன் எங்கு மறைந்து இருக்கிறது என்பதை சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.. கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் சில டிப்ஸ் தர்றோம். அதை வச்சி ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.

வலது பக்கத்தில்..
படத்தின் இடது பக்கம் மூலை முடுக்கு என தேடாமல் வலது பக்கத்தில் தேடுங்கள்.. உங்கள் முழு போகசையும் வலது பக்கத்தில் செலுத்துங்கள்.. இப்போது ஈசியா கண்டுபிடிச்சு இருப்பீங்க என நினைக்கிறோம்.. இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை.. படத்தில் டெலிபோன் இருக்கும் இடம் வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications