Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ எம்பிக்கள் கூட கிடையாது.. இது என்டிஏ 3.O.. ஆனால் இந்தியா கூட்டணியை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். அதேபோல 30 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர். இந்நிலையில் 293 என்டிஏ எம்பிக்களில் ஒரேயொரு இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய எம்பிக்கள் கூட இல்லாதது பேசுபொருளாகியுள்ளது.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

NDA BJP Minorities

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். பிரதமர் பதவிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் தூண்களாக இருப்பது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகள்தான். இந்த இரண்டு கட்சிகளின் எம்பிக்களை கழித்துவிட்டால் என்டிஏ கூட்டணிக்கு வெறும் 260 எம்பிக்கள்தான் மிஞ்சுவார்கள். ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை.

எனவே பாஜக இருவரையும் தாங்கு, தாங்கு என்று தாங்குகிறது. என்ன கேட்டாலும் செய்ய தயார் என ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பாஜக முன்வந்திருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய இலாக்காக்களை இரண்டு கட்சிகளும் குறி வைத்திருக்கின்றன. அதாவது மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இரண்டு எம்பிக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.


இப்படியாக இன்று நரேந்திர மோடியுடன் 30 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். இந்நிலையில் என்டிஏ கூட்டணியின் 293 எம்பிக்களில் ஒரேயொரு இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய எம்பிக்கள் கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கதாகியுள்ளது.


புத்த மதத்தை சேர்ந்தவராக ஒருவர் மட்டும் இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜூவில் மேற்கு அருணாச்சலப் பிரதேச தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை தொற்கடித்து எம்பியாகியுள்ளார். மொத்தமுள்ள 293 எம்பிக்களில் இவர் ஒருவர் மட்டுமே புத்த மதத்தை சேர்ந்தவராவார். 293 என்டிஏ எம்பிக்களில், 33.2 சதவீதம் உயர் சாதியினரும், 15.7 சதவீதம் இடைநிலை சாதியினரும், 26.2 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இருக்கின்றனர்.

இதே இந்தியா கூட்டணியை எடுத்துக்கொண்டால், மொத்தமுள்ள 235 எம்.பி.க்களில் இஸ்லாமியர்கள், 7.9 சதவீதமும், சீக்கியர்கள் 5 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 3.5 சதவீதமும் உள்ளனர். சாதிரீதியாக பார்த்தால், 12.4 சதவீதம் உயர் சாதியினரும், 11.9 சதவீதம் இடைநிலை சாதியினரும், 30.7 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இருக்கின்றனர்.

தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமாக 24 இஸ்லாமிய எம்பிக்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் 21 பேர் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள். இதில் காங்கிரஸிலிருந்து 7 பேரும், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து 5 பேரும், சமாஜ்வாதி கட்சியிலிருந்து 4 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (ஐயுஎம்எல்) 3 பேரும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த (என்சி) 2 பேரும் உள்ளனர். மீதமுள்ள மூன்று பேரில் ஒருவர் அசாதுதீன் ஓவைசி, மற்ற இருவரும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள்.

தேர்தலில் 11 பெரிய கட்சிகள் சார்பில் மொத்தம் 82 இஸ்லாமிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் பாஜக சார்பில் ஒருவர் மட்டுமே களமிறகக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் 6 சீக்கிய வேட்பாளர்களை பாஜக களமிறக்கியது. ஆனால் அனைவரும் தோல்வியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+