துருக்கி - அஜர்பைஜானை விடுங்க.. குறைந்த செலவில் 5 வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகலாம்!
டெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாட்டுக்கு சுற்றுலா செல்வதை பலரும் ‛கேன்சல்' செய்து வருகின்றனர். இந்த வேளயைில் துருக்கி, அஜர்பைஜானுக்கு பதில் இந்த சம்மரில் 5 நாடுகளுக்கு அதே பட்ஜெட்டில் எளிதாக சென்று வரலாம். அந்த நாடுகள் என்னென்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டுடன் ஏற்பட்ட மோதலில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கின்றன. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்த நம் நாட்டை இருநாடுகளும் விமர்சனம் செய்தன. இதனால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுடன் உள்ள உறவுகளை வர்த்தகர்கள் துண்டித்து வருகின்றன.

அதேபோல் துருக்கி, அஜர்பைஜான் நாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா செல்வார்கள்.இப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தால் நம் நாட்டு மக்கள் துருக்கி, அஜர்பைஜானுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அதனை ‛கேன்சல்' செய்து வருகின்றனர்.
இதில் நம் நாட்டில் இருந்து டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலமாக துருக்கி ஒரு ஜோடிக்கு 7 நாள் சுற்றுலா செல்ல ரூ.4 லட்சம் வரை செலவாகும். இதில் பெரும்பாலானவற்றில் விமான செலவு மற்றும் விசா நடைமுறை செலவு என்பது அடங்காது. அதேபோல் அஜர்பைஜானை எடுத்து கொண்டால் ஒரு ஜோடிக்கு நம் நாட்டில் இருந்து 4 நாள் சுற்றுலாவுக்கு ரூ.2 லட்சம் வரை செலவு ஆகும். இதிலும் விமானம் செலவு என்பது அடங்காது. இந்நிலையில் தான் துருக்கி, அஜர்பைஜான் நாட்டுக்கு செல்வதற்கு பதில் அதே பட்ஜெட்டில் அதேபோன்ற அனுபவத்தை 5 நாடுகளில் பெற முடியும். அந்த நாடுகள் என்னென்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சவூதி அரேபியா
இந்த பட்டியலில் முதலில் இருப்பது சவூதி அரேபியா. இங்கு பழமை வாய்ந்த நகரங்கள், மாடர்ன் நகரங்கள் உள்ளன. அழகான கடற்கரைகள் உள்ளன. மேலும் வரலாறு ரீதியிலான தொடர்புள்ள ஆலுலா, ஜெட்டா, செங்கடல் கடற்கரை அதனையொட்டிய லக்சரி ரெசார்ட்ஸ் உள்ளிட்டவை உள்ளன. நம் நாட்டு மக்களுக்கு இ - விசாவை பொறுத்தவரை 24 முதல்48 மணி நேரத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படும். சவூதி அரேபியா சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு 7 நாளுக்கு சராசரியாக 1.2 மதல் 1.8 லட்சம் வரை செலவு ஆகும். இதில் ஷாப்பிங் அடங்காது.
ஐக்கிய அரபு எமிரேஸ்ட்
இதில் 2வது நாடு என்பது ஐக்கிய அரபு எமிரேஸ்ட். இந்த நாட்டுக்கும் நம் நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர். பளபளவென ஜொலிக்கும் மால்கள், பாலைவன மணற்குன்றுகள் மற்றும் பாரம்பரிய சூக்குகள் (Traditional Souks)வரை அனைத்தும் உள்ளது. குடும்பமாக சென்றாலும் சரி, தனியாக சென்றாலும்சரி நன்றாக என்ஜாய் செய்யலாம். மேலம் புர்ஜ் கலீஃபா, துபாய் நீருற்று, அபுதாபியில் உள்ள ஃபெராரி வேர்ல்ட் மற்றும் ஓல்டு துபாயில் உள்ள கோல்ட் அண்ட்ஸ்பைஸ் மார்க்கெட்டுகளை சுற்றி பார்க்கலாம். விசா அனுமதி கிடைக்க 3 - 5 நாட்கள் வரை ஆகும். 5 முதல் 7 நாள் சுற்றுலாவுக்கு குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை செலவாகும்.
ஜார்ஜியா
இந்த வரிசையில் 3வது நாட்டின் பெயர் ஜார்ஜியா. அமைதியான நாடாகும். நல்ல உணவுகளை இங்கு சுவைக்க முடியும். ஒயின் மதுபானத்துக்கு பெயர் பெற்றது இந்த நாடு. பழங்கால சர்ச்சுகள், மலை நகரங்கள்(Moutain Towns) உள்ளிட்டவை உள்ளன. கண்களை கவரும் திபிலிசியின் தெரு, மலை உச்சியில் உள்ள கெர்கெட்டி டிரினிட்டி சர்ச்சை, குகை நகரங்களான வர்த்சியா மற்றும் அப்லிஸ்டிகே உள்ளிட்டவற்றை ரசிக்கலாம். இந்த நாட்டுக்கு செல்வோர் அமெரிக்கா/இங்கிலாந்து/ஷெங்கன் விசாக்களை கொண்ட பாஸ்போர்ட் இருக்கும்போது விசா இன்றி செல்லாம். இல்லாவிட்டால் விசா பெற 5 முதல் 7 நாட்கள் வரை ஆகும். 7 நாள் பயணத்துக்கு சராசரியாக ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1.3 லட்சம் வரை செலவு ஆகும்.
கிரீஸ்
அடுத்து 4வது நாடாகா நாம் பார்ப்பது கிரீஸ். துருக்கிக்கு சென்ற வர விரும்பினால் உங்களுக்கான சிறந்து மாற்று இடம் கிரீஸாக இருக்கும். வெள்ளை சுவருடன் கூடிய தீவு நகரங்கள், நீண்ட கடற்கரை உள்ளது. Mediterranean flavour உணவுகளை சுவைக்கலாம். அதேபோல் பழமையான நகரமான ஏதென்ஸ் நகரை பார்க்கலாம். ஏஜினா, ஹைட்ரா அல்லது பரோஸ் போன்ற இடங்களில் உள்ள தீவுகளுக்கு செல்லலாம். சாண்டோரினியில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கலாம். கிரேக்க உணவுகளை சுவை பார்க்கலாம். ஷெங்கன் விசா என்றால் அனுமதி பெற 10-15 நாட்கள் வரை ஆகும். 7 முதல்9 நாள் பயணத்துக்கு சராசரியாக ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு ஆகும்.
சீஷெல்ஸ்
இதில் 5வது நாடு என்பது சீஷெல்ஸ் (Seychelles). இது அமைதியான கடற்கரைகளை கொண்டுள்ளதுது. கடற்கரையில் போட்டோஷூட் எடுக்க ஏற்ற இடம். பவளப்பாறைகளுக்கு நடுவே ஸ்நோர்கெல் செய்யலாம். மழை களுக்கு நடுவே காடுகளில் நடந்து செல்லலாம். வாலி டி மாய் போன்ற யுனெஸ்கோ வரலாற்று சிறப்பு மிக்க இடம் உள்ளது. இந்திய பாஸ்பார்டே் வைத்திருப்போருக்கு விசா தேவையில்லை. 90 நாட்கள் வரை இலவச விசாவில் நேரம் செலவிடலாம். 5 முதல் 7 நாள் பயணத்துக்கு ஒருவருக்கு சராசரியாக 1.3 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications