என்ன மோடிக்கு பதில் நான் பிரதமர் வேட்பாளரா.. நிதின் கட்கரி கொடுத்த ரியாக்சன் என்ன தெரியுமா?
பாஜக பிரதமர் வேட்பாளர் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை முன்மொழிய வேண்டும் என்று விவாதங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது நிதின் கட்கரி அனைத்து சர்ச்சைகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
2019 தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி போய் தற்போது, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது.
பாஜக கட்சியிலேயே மோடிக்கு எதிராக சிலர் நிலைப்பாடு எடுத்து இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் அவர்கள் மோடிக்கு எதிராக பேச வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

நிதின் கட்கரி
மோடிக்கு பதிலாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக பாஜக நிறுத்த வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. சமயத்தில் பிரதமர் வேட்பாளரை பாஜக அறிவிக்காமல் தேர்தலை சந்தித்துவிட்டு அதன்பின் தேர்தலில் வெற்றி பெற்றால் நிதின் கட்கரியை பிரதமராக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.

அதிர்ச்சி
இந்த நிலையில் இதுகுறித்து நிதின் கட்கரி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில் பாஜகவில் சிலர் தேவையில்லாமல் பேட்டி அளிக்கிறார்கள். எல்லா விஷயத்திற்கும் கருத்து கூறுகிறார்கள். பாஜகவில் இதற்கு என்று ஒருகட்டுப்பாடு இல்லை. இதை கட்டுப்படுத்த பாஜகவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் உறுப்பினர்கள் சர்ச்சையாக பேசுவது குறையும்.

துணி
முக்கியமாக பாஜகவில் சிலருக்கு வாய் பூட்டு போட வேண்டும். சிலர் வாயில் துணி வைத்து அடைக்க வேண்டும். அவர்களின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் பாஜகவில் சிலர் பேசாமல் இருப்பதே கட்சிக்கு நல்லது.

என் வாழ்க்கை
சிலர் என்னுடைய அரசியல் வாழ்க்கையை காலி செய்ய நினைக்கிறார்கள். பாஜக கண்டிப்பாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர் மீண்டும் பிரதமராக வருவார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications