"ஒரே வார்த்தையில் பதிலை சொல்லுங்க.." தடுமாறிய அரசு வழக்கறிஞர்.. நீதிபதிகள் அதிருப்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கா தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அந்த தூண் அமைந்துள்ள நிலம் கோயிலுக்கு சொந்தமானதா என்று மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

Thiruparankundram Deepam Case

வாதம்

அப்போது தமிழக மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், அந்த தூண் தீபம் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தீபத்தூண் அல்ல என்றும் அது வேறு நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட சர்வே கல் என்றும் வாதிட்டார். அவர் மேலும், "இந்த உத்தரவு தொடர்ந்தால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சர்வே தூண்களுக்கும் மதச்சாயம் பூசப்படும். அதை வைத்து மத ரீதியான நடவடிக்கைகள் தொடங்கிவிடும். நீதிமன்றத்தின் அதிகார வரம்பு இப்படி விரிவடைய அனுமதிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

150 ஆண்டுகள்

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள கோயில், தர்கா ஆகியவை அமைந்துள்ள போட்டோக்கள், ட்ரோன் காட்சிகள் மூலமாக அவர் விளக்கினார். இதுவரை உச்சி பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வேறு இடங்களில் தீபம் ஏற்ற மூன்று முறை முயற்சி நடந்த போதிலும், அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கத்தில் இல்லாத புதிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது பாரம்பரியத்தைப் பாதிக்கும் என்றும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில், இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு வாதிட்டது.

ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்

விசாரணையின் ஒரு கட்டத்தில்.. சர்ச்சைக்குரிய தீபத்தூண் அமைந்துள்ள இடம் கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமானதா என்று மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அந்த நிலம் தர்காவுக்கு சொந்தமானது என்று தர்கா தரப்பு கூறுவதாக வழக்கறிஞர் பதிலளித்தார். இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், "நீங்கள் மாவட்ட ஆட்சியர். அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானதா இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள்" என்று வலியுறுத்தினர். அப்போது தடுமாறிய மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர், அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கே உண்மை தெரியவில்லையா? என்ன நடக்கிறது?" என்று சத்தமாகக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து தமிழக அரசின் வழக்கறிஞர் தலையிட்டு, அந்த நிலம் கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமானது என்று மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் உறுதிப்படுத்தினார். அதன் பின்னர் அவரும் அதையே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தர்கா தரப்பு

இதற்கிடையே தர்கா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அகமதி, தங்களுக்கு உரிய அவகாசம் அளிக்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும், தர்கா தரப்புக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் நேரில் ஆய்வு நடத்தியதாகவும் குற்றம்சாட்டினார். புதிய வழக்கத்தை உருவாக்க விரும்பினால் பொதுநல வழக்கு மூலம் அல்ல, உரிமையியல் வழக்கு மூலமே அணுக வேண்டும் என்றும் வாதிட்டார். இன்றைய தினம் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கு விசாரணை நாளை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+