இந்த 3 விஷயங்கள் பாஜகவை துரத்தும்.. தேர்தலில் தோல்வி அடைய செய்யும்.. ப.சிதம்பரம் அதிரடி!
லோக் சபா தேர்தலில் மூன்று முக்கிய விஷயங்கள் பாஜகவை தோல்வி அடைய செய்யும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: லோக் சபா தேர்தலில் மூன்று முக்கிய விஷயங்கள் பாஜகவை தோல்வி அடைய செய்யும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் ஐந்து மாநில தேர்தல் குறித்து விவாதம் செய்ய கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி குழுவிற்கு தலைவராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டது.
[இந்தியாவிற்கு வர முடியாது.. மோடியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த டிரம்ப்.. திடுக் காரணம்!]

மூன்று விஷயம்
இதன் முடிவில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அதன்படி மொத்தம் 67 விஷயங்கள் வாக்குறுதிகளாக அளிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதம் செய்வோம். லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. பாஜக அதில் பெரும் தோல்வி அடையும். இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது, என்றுள்ளார்.

முதல் விஷயம்
ப.சிதம்பரம் சொல்லும் முதல் காரணம், பெண்கள் பாதுகாப்பு பாஜகவிற்கு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். பாஜக ஆட்சியில்தான் பெண்களுக்கு எதிரான நிறைய குற்றங்கள் நடந்து இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது முக்கிய காரணம் ஆகும்.

இரண்டாவது விஷயம்
அடுத்ததாக, தொடர்ந்து உயரும் விலைவாசி பாஜகவிற்கு பெரிய பிரச்சனையாகி இருக்கும். எல்லோரும் வங்கியிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று கூறிவிட்டு பிரதமர் மோடி, இப்போது தினமும் பெட்ரோல் விலையை ஏற்றுகிறார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுகிறார் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

மூன்றாவது விஷயம்
கடைசியாக கடும் வேலைவாய்ப்பு திண்டாட்டம் பிரச்சனையாக முடியும் என்றுள்ளார். வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். எல்லோருக்கும் வேலை வாங்கி தருவதாக கூறிவிட்டு பாஜக ஏமாற்றிவிட்டது என்று ப.சிதம்பரம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications