Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொம்ப மூச்சுமுட்டுதே.. உலகிலேயே படுமோசமான டிராபிக் ஜாம்.. இந்திய நகருக்கு 2ம் இடம்..எது தெரியுமா?

உலகிலேயே அதிக டிராபிக் ஜாம் உள்ள நகராக லண்டன் உள்ள நிலையில் 2வது இடத்தில் இந்திய நகரம் இருப்பது தெரியவந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகில் மிகவும் மோசமான டிராபிக் ஜாம் உள்ள நகரங்கள் பற்றி தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 56 நாடுகளில் 389 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டதில் மோசமான டிராபிக் ஜாம் உள்ள நகரங்களின் பட்டியலில் லண்டன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இந்திய நகரம் இருக்கும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பது போல் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. வரும் நாட்களில் மக்களின் எண்ணிக்கையை விட வாகனங்களின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கும் சூழல் உள்ளது.

இந்நிலையில் தான் நாட்டின் பல்வேறு இடங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்தியாவிலும் டெல்லி, சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்பட முக்கிய நகரங்களில் காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் ஓட்டுவது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. மேலும் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதும் உண்டு.

டிராபிக் ஜாம் தொடர்பாக ஆய்வு

டிராபிக் ஜாம் தொடர்பாக ஆய்வு


இந்நிலையில் தான் உலக நாடுகளில் போக்குவரத்து நெரிசல்(டிராபிக் ஜாம்) அதிகம் உள்ள நகரங்கள் எது? என்பதை கண்டறியும் வகையில் டாம்டாம் எனும் டச்சு மல்டிநேஷனல் தொழில்நுட்ப நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. மொத்தம் 56 நாடுகளில் 389 முக்கிய நகரங்களை எடுத்து கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு என்பது 10 கிலோமீட்டரை கடக்க பொதுமக்கள் எடுத்து கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் டாம் டாம் மல்டி நேஷனல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 12வது(2022ம் ஆண்டு) வருடாந்திர போக்குவரத்து பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

லண்டன் முதலிடம்

லண்டன் முதலிடம்

அதன்படி உலகில் அதிக டிராபிக் ஜாம் உள்ள நகரமாக பிரிட்டன் தலைநகர் லண்டன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 10 கிலோமீட்டர் தொலைவை வாகனங்கள் கடக்க 36 நிமிடம் 20 வினாடிகள் ஆகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உலகில் அதிக டிராபிக் ஜாம் உள்ள நகரம் என்ற பெயரை லண்டன் பெற்றுள்ளது.

2வது இடத்தில் இந்திய நகரம்

2வது இடத்தில் இந்திய நகரம்

இதற்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் உலகில் அதிகப்படியான டிராபிக் ஜாம் உள்ள நகரமாக இந்தியாவின் முக்கிய நகரம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன்படி அண்டை மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூர் தான் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 10 கிலோமீட்டர் தொலைவை பொதுமக்கள் கடக்க 29 நிமிடம் 10 வினாடிகள் எடுத்து கொள்வதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 3வது இடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரும், 4வது இடத்தில் ஜப்பானின் சாபோரா நகரம் உள்ளது. இதில் டப்ளின் நகரில் 10 கிலோமீட்டர் தொலைவை பொதுமக்கள் 28 நிமிடங்கள் 30 வினாடிகளிலும், சாபோராவில் 10 கிலோமீட்டர் தொலைவை 27 நிமிடம் 40 வினாடிகளிலும் பொதுமக்கள் எடுத்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன்டை ஆக்ஸைடு உமிழ்வு

கார்பன்டை ஆக்ஸைடு உமிழ்வு

மேலும் போக்குவரத்து நெரிசல் மூலம் பொதுமக்கள் அதிகளவு நேரத்தை இழக்கும் நகரங்களின் பட்டியலில் பெங்களூர் 4வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டப்ளின் முதலிடத்திலும், புக்கரெஸ்ட் 2வது இடத்திலும், லண்டன் 3வது இடத்திலும் உள்ளது. அதோடு Rush Hourல் ஒரு மைல் தொலைவு பயணத்தில் அதிகளவு கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறும் நகரங்களின் பட்டியலில் பெங்களூர் உலகளவில் 5வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் லண்டன் முதலிடத்திலும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2வது இடத்திலும், மணிலா 3வது இடத்திலும் ரோமாணியாவின் புக்கரெஸ்ட் 4வது இடத்திலும் உள்ளன.

எரிபொருள் செலவு அதிகரிப்பு

எரிபொருள் செலவு அதிகரிப்பு

மேலும் 2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 2022ல் எரிபொருளுக்கான செலவு என்பது பல மடங்கு அதிகரித்துள்ளன. பெட்ரோல் கார் பயன்படுத்துபவர்களை பொறுத்தமட்டில் சராசரியாக 27 சதவீதம் வரை எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது. டீசல் கார் பயன்படுத்துபவர்களை பொறுத்தமட்டில் சராசரியாக 48 சதவீதம் வரை எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

லண்டனில் செலவு அதிகம்

லண்டனில் செலவு அதிகம்

மேலும் இந்த ஆய்வில் இன்னொரு முக்கிய விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்துக்கான அதிக செலவு உள்ள நகரமாகவும் லண்டன் முதலிடத்தில் உள்ளது. பெட்ரோல், டீசல், மின்சார வாகனம் சார்ஜ் செய்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+