தாவூத் இப்ராஹிமுக்கு என்ன ஆச்சு? யார் இவர்? எதற்காக இவரை இன்டர்போல் தேடுகிறது? வெளியான ஷாக் தகவல்கள்
டெல்லி: சர்வதேச அளவில் குறிப்பாக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும், தாவூத் இப்ராஹிம் பற்றிய சலசலப்புகள் தற்போது மீண்டும் அதிகரித்திருக்கின்றன. யார் இந்த தாவூத்? ஏன் அவர் தேடப்படுகிறார்? தற்போது அவர் குறித்த சலசலப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகனாக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் தாவூத். பின் நாட்களில் ஒட்டு மொத்த மும்பையையே தனது கட்டுப்பாட்டில் தாவூத் கொண்டுவருவார் என அன்று யாரும் கணித்திருக்கவில்லை. பதின் பருவத்திலேயே சிலசில திருட்டுகளிலும், ரவுடிசத்திலும் தாவூத் அதிகமாக ஈடுபட்டிருந்தார். இளம் பருவத்தில் மாஃபியா கும்பலின் தொடர்பு இவரை மேலும் அதிக குற்ற செயல்களில் ஈடுபடுத்தியது.

கொள்ளை, கொலை, போதை பொருட்கள் கடத்தல், ஆள்கடத்தல் என கோதாவில் இறங்கினார். இவருக்கு பக்க பலமாக இருந்தது இவரது அண்ணன்தான். எல்லாம் சரியாதான் போய்கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இவருடைய அண்ணன் ஒரு எண்கவுண்டரில் கொல்லப்பட்டார். மட்டுமல்லாது மும்பை போலீசின் கழுகு பார்வை தாவூத்தை துரத்திக்கொண்டே இருந்தது. ஒரு பக்கம் அண்ணன் போன சோகம், இன்னொரு பக்கம் போலீசின் குடைச்சல். இதையெல்லாம் பார்த்து டென்ஷனான தாவூத், ஒரு முக்கியமான மூவை முன்னெடுத்தார். அதுதான் 'டி' கம்பெனி!
அதுவரை கமிஷனுக்கு வேலை பார்த்த ரவுடிகளை எல்லாம், பெரிய பெரிய நோக்கத்திற்காக இந்த கம்பெனி ஒன்று திரட்டியது. சூதாட்டம், ஆள் கடத்தல், கொலை, போலி ரூபாய் நோட்டுகள், குண்டு வெடிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற வேலைகளை இந்த 'டி' கம்பெனி சர்வதேச அளவில் செய்ய தொடங்கியது. இந்த குற்றச் செயல்கள் பெரும் பணத்தை 'டி' கம்பெனியிடம் புழங்க செய்தது. பணம் சேரசேர டி கம்பெனியின் பலம் அசாத்தியமாக வளர்ந்தது. கூடவே கூடுதல் பயங்கரவாத தாக்குதல்களும் அதிகரித்தன.
1993ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதேபோல அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் தொடர்பில் இருந்ததால் அமெரிக்காவும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
அதன் பின்னர் 170 உயிர்களை பலி வாங்கிய 2008 மும்பை தாக்குதலுக்கு பின்னர் இன்டர்போல், தாவூத்தை தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என இந்தியா பலமுறை குற்றம்சாட்டியது. இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடமும், சர்வதேச நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தது. ஆனால் தாவூத் இங்கு இல்லை எனவும், அவரை நாங்கள் பாதுகாக்கவில்லை என்றும் பாகிஸ்தான் ஒரே போடாக மறுத்துவிட்டது.
இப்படி இருக்கையில்தான் தாவூத் இப்ராஹிமுக்கு யாரோ விஷம் கொடுத்துவிட்டார்கள் என தகவல்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இறந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அதேபோல பாகிஸ்தானில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் இந்த தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை. இதனால் தாவூத் குறித்த பேச்சு மீண்டும் அடிப்பட தொடங்கியிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக தாவூத்தை பிடிக்க இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் ரேடார் பார்வையிலிருந்து தப்பிக்க இது போன்ற நாடகங்களை தாவூத் அரங்கேற்றுகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications