கையில் மதுக்குவளை.. மஹுவா மொய்த்ராவுடன் நெருக்கம்.. பரவும் போட்டோவுக்கு சசிதரூர் எம்பி பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மஹுவா மொய்த்ராவுடன் மதுக்குவளையுடன் காங்கிரஸ் எம்பி சசிதரூர் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு சசிதரூர் எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோக்சபா எம்பி மஹுவா மொய்த்ரா. இவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக அதானி மீதான முறைகேடு குறித்து நாடாளுமன்றம் மற்றும் வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.

This is low level Politics, says Congress MP Shashi Tharoor after leaked photos with Mahua Moitra

இந்நிலையில் தான் லோக்சபாவில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதற்கான மஹுவா மொய்த்ரா எம்பி தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம், பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் லோக்சபாவில் அதானி குறித்து கேள்வி கேட்க மஹுவா மொய்த்ரா எம்பிக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, நாடாளுமன்ற நெறிமுறை குழுவிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும் நாடாளுமன்ற நெறிமுறைக்குழு இதுபற்றி விசாரணையை தொடங்க உள்ளது.

இதற்கிடையே தான் கடந்த சில நாட்களாக மஹுவா மொய்த்ரா மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோர் சேர்ந்து இருக்கும் போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இருவரும் மதுக்குவளையுடன் இருப்பது போலவும், மஹுவா மொய்த்ரா சிகரெட் புகைப்பது போன்றும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. இந்த போட்டோ விவாதத்தை கிளப்பியது. சிலர் அவர்கள் 2 பேரையும் இணைத்து தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது இருவரும் ரகசியமாக சந்தித்து கொண்டதாக தகவல்கள் பரப்பி விடப்படுகிறது.

இந்நிலையில் சசிதரூர் எம்பி கடும் கோபமடைந்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கேரளா மாநிலம் கோட்டையத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: இது மிகவும் கீழ்த்தரமான அரசியல். இந்த போட்டோ என்பது அந்த குழந்தையின் (மஹுவா மொய்த்ரா) பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது. அவரை யாரும் குழந்தையாக அழைக்க முடியாது. ஆனால் எனக்கு அவர் அப்படித்தான். என்னை விட 10 முதல் 20 வயது குறைந்தவர் அவர்.

அவரது பிறந்தநாளுக்கு 15 பேர் வந்திருந்தனர். என் சகோதரியும் வந்திருந்தார். இருப்பினும் சிலர் வேண்டும் என்றே கிராப் செய்து ரகசியமாக சந்தித்ததாக போட்டோக்களை பரப்பி வருகின்றனர். இது உண்மையாக இருந்தால் எங்களை யார் போட்டோ எடுத்து இருப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற ட்ரோல்களை நான் கண்டுக்கொள்வது இல்லை. இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் உள்ளது. மக்களுக்காக பணியாற்றுவதே எங்களின் முதன்மை நோக்கமாக உள்ளது'' என்றார்.

முன்னதாக இந்த போட்டோ விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பாஜகவின் ட்ரோல் சேனா கும்பல் தான் எனது தனிப்பட்ட போட்டோக்களை பரப்பி வருகிறது. வங்காள பெண்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். பொய்களில் வாழ்வது இல்லை. ஏன் இந்த போட்டோவின் பாதியை வெட்டி உள்ளீர்கள். முழுமையாக நடந்த இரவு உணவு விருந்தை காட்டுங்கள்'' என சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+