Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோனியா - ராகுல் மீது குற்றப்பத்திரிகை.. பிரதமரை விளாசிய காங்கிரஸ்.. ஜெய்ராம் ரமேஷ் ‛அட்டாக்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளாசி உள்ளதோடு, காங்கிரஸ் மேலிடம் அமைதியாக இருக்காது என்று வார்னிங் செய்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனமான அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றி உள்ளதாக புகார் எழுந்தது.

sonia gandhi rahul gandhi national herald

இந்த இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர்.

மேலும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு சம்மன் வழங்கி விசாரித்தது.

இதையடுத்து இருவருக்கும் தொடர்புடைய ரூ.661 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் இன்று குற்றப்பத்திரிகை என்பது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் தான் குற்றப்பத்திரிகை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அமலாக்கத்துறை மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த குற்றப்பத்திரிகை என்பது பிரதமரின் பழிவாங்கும் நடவடிக்கை. இதனை காங்கிரஸ் மேலிடம் பார்த்து கொண்டு அமைதியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:‛‛சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மற்றவர்கள் மீதான குற்றப்பத்திரிகை என்பது வேறு ஒன்றும் இல்லை. இது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையுடன் கூடிய மிரட்டல் தான். இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் தலைமை அமைதியாக இருக்காது. சத்யமேவ ஜெயதே'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+