இந்தியாவில் டாப் 5 ரயில்வே பயணங்கள் இதுதான்.. லிஸ்ட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் ரூட் எது தெரியுமா?
டெல்லி: ரயில் பயணம் என்றாலே பலருக்கும் அலாதி பிரியம் இருக்கும். ரயில் பயணத்தில் செல்லும் வழித்தடங்கள் மொத்த இயற்கை ரம்மியங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாக அமைந்திருக்கும். இந்தியாவில் அப்படிப்பட்ட டாப் 5 ரயில் பயணங்களை எவை என்று பார்க்கலாம்.
பயணங்களை விரும்பாதவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். பேருந்தோ ரயிலோ.. என பயணம் செய்வதில் பலருக்கும் அலாதி பிரியமாக இருக்கும். அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் வெளிப்புறங்களில் புதிது புதான இடங்களையும் அங்கு கொட்டி கிடக்கும் இயற்கை காட்சிகளையும் பார்த்துக்கொண்டெ சென்றால் நேரம் போவதே தெரியாது.

இப்போது பலரும் ஜாலியாக பைக்குகளில் கூட நீண்ட தூரம் ரைட் செய்வதை பார்க்க முடிகிறது. தற்போது கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் நீண்ட தொலைவு பயணம் செய்து சுற்றுலாவிற்கு செல்கிறார்கள். குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கு முதல் தேர்வாக இருக்கும். அதிலும் சில ரயில் பயணங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடும்.
ரயில்கள் செல்லும் வழித்தடங்கள் மொத்த இயற்கை ரம்மியங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாக அமைந்து விடும். இந்தியாவில் அப்படிப்பட்ட டாப் 5 ரயில் பயணங்களை பார்க்கலாம்:-
1. டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே: யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில் சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்பும் ஒன்றாக உள்ளது. டாய் டிரெயின் என்றும் அறியப்படும் இந்த பயணம் டார்ஜிலிங்கில் உள்ளது. இமய மலையின் அழகை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் இது அமைந்து இருக்கும். அழகான பசுமை நிறைந்த காடுகள் உள்ளிட்டவற்றை கடந்து இயற்கையை ரசித்தவாறே இந்த பயணம் அமையும்.
2. கொங்கன் ரயில்வே: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பாதையில் இந்த ரயில் செல்கிறது. பல சுரங்க பாதைகள், பாலங்கள், நீர் வீழ்ச்சிகள் என இந்த பயணம் மறக்க முடியாத அனுபவங்களை கொடுப்பதாக இருக்கும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் பலரும் இயற்கை காட்சிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தவாறு செல்வதை காண முடியும்.
3. நீலகிரி மலை ரயில்: யுனேஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை மிகவும் அழகான பசுமை காட்சிகளை கொண்டதாக இருக்கும். அடரந்த காடுகள், நீலகிரி மலைகளுக்கு இடையே இந்த ரயில் செல்வதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பயணிகளுக்கு ரம்மியமான ஒரு பயணமாக இது கண்டிப்பாக அமையும்.
4. கல்கா - ஷிம்லா ரயில்வே: இமாசல பிரதேசத்தில் உள்ள இந்த ரயில் பாதை இமயமலை பகுதிகளில் செல்கிறது. பல சுரங்கங்களையும், பாலங்களையும், மலை முகடுகளையும் கடந்து செல்லும் இந்த வழித்தடம் பயணம் தூரம் முழுவதிலும் மொத்த இயற்கை அழகையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும்.
5. மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில்: நகரும் அரண்மனை என்று வர்ணிக்கப்படும் ராஜஸ்தானின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் அதி நவீன வசதிகளுடன் பல வசதிகளை கொண்ட ரயிலாகும். ரயிலின் வசதிகள் ஒருபக்கம் என்றால் அழகான அரண்மனைகள், கோட்டைகள் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை கடந்து பயணிகளுக்கு ராஜஸ்தானின் கலாசாரத்தை பாரம்பரியத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாக இந்த ரயில் இருக்கும்.












Click it and Unblock the Notifications