பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை.. உச்சநீதிமன்றத்தை விளாசிய நிஷிகாந்த் துபே பற்றி ஜேபி நட்டா விளக்கம்
டெல்லி: நாட்டில் உச்சநீதிமன்றம் சட்டங்களை கொண்டு வரும் என்றால் நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும். தற்போது நடக்கும் மதமோதல்களுக்கு உச்சநீதிமன்றம் தான் காரணம் என கூறிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவின் கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதையடுத்து பாஜகவுக்கும், இந்த கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது நிஷிகாந்த் துபேவின் கருத்து என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் கோட்டா நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் நிஷிகாந்த் துபே. 2009 2014, 2019, 2024 என தொடர்ந்து 4வது முறையாக அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாகி உள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் தான் நிஷிகாந்த் துபே உச்சநீதிமன்றத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர், ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயம் செய்தது மற்றும் வக்ஃபு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவர் தனது கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உச்சநீதிமன்றம் சட்டங்களை கொண்டு வரும் என்றால் நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும்'' என்று கூறியிருந்தார். மேலும் அவர் அளித்த பேட்டியில், ‛‛உச்சநீதிமன்றம் தனது அதிகார வரம்பை தாண்டி செயல்பட்டு வருகிறது. அனைத்து விஷயங்களுக்கும் ஒருவர் உச்சநீதிமன்றம் செல்ல முடியும் என்றால் நாடாளுமன்றம் சட்டசபையை இழுத்து மூட வேண்டும்.
தற்போது நாட்டில் நடக்கும் மதமோதல்களுக்கு உச்சநீதிமன்றம் தான் காரணம். சட்டத்தின்படி ஒரு அமைப்பின் நியமனத்துக்கு உச்சநீதிமன்றம் எப்படி வழிக்காட்ட முடியும்? ஜனாதிபதி தான் இந்தியாவின் தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார். நாட்டுக்கான சட்டத்தை நாடாளுமன்றம் தான் உருவாக்குகிறது. இப்படி இருக்கும்போது நீதிமன்றத்தால் எப்படி நாடாளுமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்?'' எனவும் கேள்வி எழுப்பினார்.
இது சர்ச்சையாகி உள்ளது. எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதேவேளையில் பாஜக எம்பி தினேஷ் ஷர்மா ஆதரவு அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இந்திய அரசியலமைப்பின்படி மக்களவை, மாநிலங்களவையை யாரும் வழிநடத்த முடியாது. சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி அனுமதி அளித்தால் அவரை யாரும் சவால் செய்ய முடியாது. ஏனென்றால் நாட்டில் ஜனாதிபதியே உச்சபட்சமானவர்'' என கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் நிஷிகாந்த் துபேயின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஜேபி நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் ஷர்மாவின் கருத்துகள் அவரது சொந்த கருத்துகளாகும் என்று தெரிவித்து சர்ச்சையில் இருந்து பாஜகவை விலக்கி உள்ளார். இதுதொடர்பாக ஜேபி நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்பிக்கள் நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுடன் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இவை அவர்களின் தனிப்பட்ட கருத்தகள்.
பாஜக அந்த கருத்தை ஏற்கவில்லை. அதனை ஆதரிக்கவும் இல்லை. இந்த கருத்துகளை பாஜக முற்றிலுமாக நிராகரிக்கிறது. பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து வருகிறது, அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது. ஏனெனில், ஒரு கட்சியாக, உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications