Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பதவிக்காக கொள்கையை விற்றால் இப்படிதான் நடக்கும்.." உத்தவ் தாக்கரேவை நேரடியாக சாடிய அமித் ஷா

"பதவிக்கு ஆசைப்பட்டு தங்கள் கொள்கைக்கு நேர் எதிரான சித்தாந்தம் கொண்டவர்களுடன் சிலர் உறவு கொண்டாடினார்கள். அவர்களுக்கு எந்த பக்கம் உண்மை இருக்கிறது என்பது இன்று தெரிந்திருக்கும்"

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "பதவிக்காகக் கொள்கையை விற்றதோடு மட்டுமல்லாமல், முற்றிலும் நேர் எதிரான சித்தாந்தங்களுடன் உறவு கொண்டாடியவர்கள் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் சிவசேனா கட்சியை இழந்து நிற்கும் உத்தவ் தாக்கரேவை மறைமுகமாகக் குறிப்பிட்டு அமிஷ் ஷா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் ஏதும் சிவசேனா - பாஜக இடையே ஏற்படவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

 பாஜகவுக்கு 'ஷாக்'

பாஜகவுக்கு 'ஷாக்'

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியமைக்க தயாரானது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா. ஆனால், உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையான சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என்பதை பாஜக ஏற்கவில்லை. இதனால் அக்கட்சியுடனான கூட்டணியை உடைத்த உத்தவ் தாக்கரே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்து ஆட்சியில் அமர்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றார். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போதே சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதை பாஜக மீறியதாகவும் உத்தவ் குற்றம்சாட்டினார்.

 காத்திருந்து அடித்த பாஜக

காத்திருந்து அடித்த பாஜக

இந்த சூழலில், உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே, திடீரென உத்தவ் தாக்கேரவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். இந்துத்துவா கொள்கைகளை உத்தவ் தாக்கரே விட்டுக்கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக, 35க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாக நின்றனர். முடிவில், தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்த ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார். பாஜகவின் வழிகாட்டுதலின்படியே ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மாறியதாக அப்போது கூறப்பட்டது.

"மத்திய அரசின் அடிமை"

இதனிடையே, உண்மையான சிவசேனா நாங்கள்தான் என இரு அணிகளுக்கும் இடையே பிரச்சினை எழுந்து வந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அவர்களுக்கு வில் அம்பு சின்னமும் சொந்தம் என அதிரடியாக அறிவித்தது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, இது முழுக்க முழுக்க ஜனநாயகப் படுகொலை என்றும், மத்திய அரசின் அடிமையாகத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டதாகவும் கூறினார்.

 அமித் ஷா பதிலடி

அமித் ஷா பதிலடி

இந்நிலையில், டெல்லியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் சிவசேனா விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் கூறுகையில், "வாய்மையே வெல்லும் என்ற தாரகமந்திரம் உண்மை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பதவிக்கு ஆசைப்பட்டு தங்கள் கொள்கைக்கு நேர் எதிரான சித்தாந்தம் கொண்டவர்களுடன் சிலர் உறவு கொண்டாடினார்கள். அவர்களுக்கு எந்த பக்கம் உண்மை இருக்கிறது என்பது இன்று தெரிந்திருக்கும். மீண்டும் சொல்கிறேன்.. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+