டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெஜ்ரிவால் மகளின் வங்கிக் கணக்கிலிருந்து பணமோசடி.. 3 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம் பணமோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் தனது வீட்டிலிருந்த பழைய சோபாவை விற்பது தொடர்பாக ஆன்லைன் விற்பனைக்கான இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

Three arrested for cheating Delhi CMs daughter

இந்த விளம்பரத்தை பார்த்த மர்ம நபர் ஒருவர் ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டு பேசி அவருக்கு பணம் அனுப்புவதாக கூறி அவரது வங்கிக் கணக்கிலிருந்து கடந்த 7-ஆம் தேதி 34 ஆயிரம் ரூபாயை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸார் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். விசாரணையில் அவர்கள் ஷாஜித், கபில் மற்றும் மன்வேந்த்ரா ஆகியோராவர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் பண மோசடி... ரூ. 34 ஆயிரத்தைச் சுருட்டிய திருடன்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் பண மோசடி... ரூ. 34 ஆயிரத்தைச் சுருட்டிய திருடன்

அந்த 4 பேரில் ஒருவர் ஹர்ஷிதாவிடம் பேசி அவரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு சிறிய தொகையை அனுப்பியுள்ளார். பின்னர் ஒரு பார்கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்படி கூறியுள்ளார்.

அதை ஹர்ஷிதா ஸ்கேன் செய்ததும் அவரது கணக்கிலிருந்து ரூ 20 ஆயிரம் மற்றும் ரூ 14 ஆயிரம் என இரண்டு தவணைகளில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

English summary
Three arrested for cheating Rs 34,000 of Delhi Chief Minister Arvind Kejriwal's daughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X