பிரான்ஸ் தேவாலயத்தில் கத்திகுத்து தாக்குதல்.. 3 பேர் கொலை.. பிரதமர் மோடி கடும் கண்டனம்
பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்
டெல்லி: இன்று பிரான்ஸ் நாட்டில் சர்ச்சில் நடைபெற்ற கத்திகுத்து தாக்குதலுக்கும், மற்றும் அந்த நாட்டில் சமீப காலமாக நடந்து வரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற தேவாலயத்தில் இன்று மதியம் திடீரென ஒரு மர்மநபர் கத்தியுடன் நுழைந்தார்.. அங்கிருந்த ஒரு பெண் உட்ப 3 பேரை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுவிட்டார்.. அந்த பெண்ணின் தலையை துண்டித்து கொன்றதுடன், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

சம்பந்தப்பட்ட பயங்கரவாதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த கொடூரம் உலக நாடுகளை அதிர்ரச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதனிடையே நபிகள் நாயகத்தின் கார்டூனை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நைஸ் நகரில் தேவாலயத்திற்குள் இன்று நடந்த கொடூரமான தாக்குதல் உட்பட, பிரான்சில் தற்போது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த மற்றும் மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா எப்போதும், பிரான்சுடன் துணை நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications