23 மொழிகளுக்கு ஆசிரியர்கள் எங்கே? மும்மொழி கொள்கையை அவசர கதியில் அமல்படுத்தக்கூடாது! உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. 23 மொழிகளை கற்பிக்க தேவையான ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உருவாக்கப்படும் என்று கேட்டுள்ள நீதிபதிகள், மும்மொழி கொள்கையை அவசர கதியில் அமல்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை கொண்டு வந்துள்ளது. தாய்மொழியோடு சேர்த்து இரு மொழிகளை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் ஒன்றை மாணவர் கற்றுக்கொள்ளலாம். இருப்பினும், இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Three Language Policy

மும்மொழி கொள்கை

என்ன தான் 23 மொழிகளில் ஒன்று என சொன்னாலும் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பதே தமிழ்நாட்டின் வாதமாக இருக்கிறது. போதிய ஆசிரியர்கள் இல்லாததால் இந்தி மொழியே கற்பிக்கப்படும் என்றும் இது மறைமுகமாக இந்தி மொழியை திணிக்கும் நடைமுறை என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சரமாரி கேள்வி

இதற்கிடையே மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர். மும்மொழிக் கொள்கையின் கீழ் ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்க வேண்டுமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுபோன்ற கொள்கையை அமல்படுத்துவதற்கு முன்பு அதன் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

உள்கட்டமைப்பு இல்லை

மேலும், 23 மொழிகளை கற்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இந்த கொள்கையை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குத் தேவையான ஆசிரியர்கள் எங்கிருந்து கிடைப்பார்கள் என்றும் அவர்கள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர். மும்மொழி கொள்கையில் ஆங்கிலத்தை உள்நாட்டு மொழி அல்ல என்று கூற முடியுமா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆங்கிலம்

ஆங்கிலத்தை பூர்வீகமான அல்லது உள்நாட்டு மொழியாக பரிசீலிக்கும் வகையில் மொழிக் கொள்கையை மறு ஆய்வு செய்வது குறித்து ஆராய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலத்தை பூர்வீக மொழியாக அறிவிப்பது தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் அவசர கதியில் செயல்படக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+