திகார் சிறையில் கொடுமை... முஸ்லீம் நபரின் முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் "ஓம்"
டெல்லி: திகார் சிறை கைதி ஒருவரின் முதுகில், பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என எழுதிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள, நபீர் என்ற முஸ்லிம் கைதியின், முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி, தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் மற்ற கைதிகளின் வாக்குமூலங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Delhi: A prisoner at Tihar Jail, Nabir, complained at Karkardooma court that jail superintendent Rajesh Chauhan tattooed "Om" on his back knowing he is a Muslim. Tihar Jail DG says,"DIG conducting enquiry.Inmate shifted to another jail. Detailed report will be submitted to court" pic.twitter.com/xwrnShKiut
— ANI (@ANI) April 19, 2019
பாதிக்கப்பட்ட கைதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, நபீர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், டிஜஜி தலைமையில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications