"டைம் ஓவர்" 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இனியும் கையில் இருந்தால் என்னவாகும்.. மாற்ற முடியுமா?
டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இனியும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து இருந்தால் அதை மாற்ற முடியுமா? என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. அதன் விவரங்களை பார்க்கலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது உயர் மதிப்பு கொண்ட இந்த ரூபாய் அதிக அளவு புழக்கத்தில் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பண மதிப்பிழப்பு அறிமுகம் ஆன சமயத்தில் சில்லறை மாற்ற முடியாத அளவுக்கு வெறும் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் மட்டுமே ஏடிஎம்மில் கிடைத்தன.

எனினும் படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் குறையத்தொடங்கின .கடந்த ஓராண்டாகவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்த நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குகுள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. வங்கிகளில் எந்த ஆவணங்களும் இன்றி பணத்தை மாற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டது.
இதைப்பயன்படுத்தி மக்கள் தங்கள் வசம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றி வந்தனர். செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்த அவகாசம், மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, அக்டோபர் 7 ஆம் தேதி வரை வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
இந்த நிலையில் தான், இனியும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து இருந்தால் அது என்னவாகும், செல்லாத ரூபாய் நோட்டுக்களாகிவிடுமா? பணத்தை மாற்ற முடியுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டதாவது:- பொதுமக்களோ நிறுவனங்களோ தங்கள் வசம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகத்தின் மூலமாக தொடர்ந்து மாற்றிக்கொள்ள முடியும்.
அகதாபாத், பெங்களூர், பெலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஐதரபாத், ஜெய்பூர், ஜம்மு , கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மாற்றிக்கொள்ள முடியும். அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றலாம்.
தற்போதுவரை திரும்பப் பெறப்பட்ட ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக் கணக்குகளில் வைப்பு வைக்கப்பட்டது. மற்றவை வங்கிகளில் பணமாக மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. ரூ.12,000 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. ரிசர்வ் வங்கிக்கு செல்ல இயலாதவர்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியும். . 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக இருக்கும்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications