2024ல் மீண்டும் பாஜக ஆட்சி! பிரதமராகும் மோடி! ‛இந்தியா’ கூட்டணிக்கு அடி! டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
டெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இதனால் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் நாடாளுமன்ற அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இத்தகைய சூழலில் நான் இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற வகையில் டைம்ஸ் நவம் இடிஜி (Times Now ETG) சார்பில் இந்தியாவில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்பார்கள் எனவும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கருத்து கணிப்பின்படி ஹிந்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தேர்தல் நடந்தால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் 26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையாமல் தனியாக நிற்கும் ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 24 முதல் 25 தொகுதிகளிலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி 12 முதல் 14 தொகுதிகளிலும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 9 முதல் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications