டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டியிடாத கட்சிக்கு 2.9% ஓட்டாம்.. அரே பய்யா.. இன்னா மாதிரி குழப்பியிருக்கீங்க பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக கூட்டணிக்கே வெற்றி ! சி வோட்டர் அதிரடி கணிப்பு!

    டெல்லி: எக்ஸிட் போல்களின் நம்பகத்தன்மையை மக்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

    எக்ஸிட் போல்கள் குறித்து கலவையான கருத்துக்கள் நிலவுகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இதை நிராகரித்துள்ளனர். பொதுமக்கள் மத்தியிலும் கூட இருவிதமான எண்ணங்கள் உள்ளன.

    இதற்கு முக்கியக் காரணம், இவை வெறும் கணிப்புகள் என்பதால். அது மட்டுமல்ல, சில கருத்துக் கணிப்புகளில் காணப்படும் தவறுகளும் கூட மக்களின் சந்தேகப் பார்வையை வலுப்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு உத்தரகாண்ட்.

    கருத்து கணிப்புகள் குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை- முக ஸ்டாலின் கருத்து கணிப்புகள் குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை- முக ஸ்டாலின்

    உத்தரகாண்ட் கருத்துக் கணிப்பு

    உத்தரகாண்ட் கருத்துக் கணிப்பு

    உத்தரகாண்ட் மாநிலத்தில் தேஹ்ரி கார்வால், கார்வால், அல்மோரா தனி, நைனிடால் உதம்சிங் நகர், ஹரித்வார் என ஐந்து தொகுதிகள் உள்ளன. இங்கு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று வட இந்திய ஊடகங்கள் வெளியிட்டன.

    பாஜகவுக்கே வாய்ப்பு

    பாஜகவுக்கே வாய்ப்பு

    பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு 5 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் படு தோல்வியை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஒரு டிவி குழப்பியுள்ளது.

    குழப்பிய டைம்ஸ் நவ்

    டைம்ஸ் நவ் விஎம்ஆர் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சிக்கு சீட் எதுவும் கிடைக்காது என்றும் அக்கட்சிக்கு 2.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

    போட்டியிடாத கட்சிக்கு வாக்கு எப்படி

    போட்டியிடாத கட்சிக்கு வாக்கு எப்படி

    உண்மையில் ஆம் ஆத்மி கட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் போட்டியிடவே இல்லை. அக்கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களில் தனித்தும், ஹரியானாவில் கூட்டணி வைத்தும் போட்டியிட்டது. வேறு எங்கும் அது போட்டியிடவில்லை. இந்த நிலையில் ஆம் ஆத்மிக்கு 2.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருப்பது இதன் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

    English summary
    Times now exit poll has created flutter among AAP cadres as the party is not contesting in Uttarkhand but the TN has given 2.9% vote share for the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X