உத்தர பிரதேசத்தில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் யார்? வெளியான "சுவாரசிய" டைம்ஸ் நவ் போல்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக டைம்ஸ் நவ் சார்பில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் மக்கள் விரும்பும் முதல்வர் யார் என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேரின் பேவரைட் யார் தெரியுமா?

சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது குறித்து டைம்ஸ் நவ் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பாஜக 227 முதல் 254 இடங்களில் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்றும் சமாஜ்வாதி கூட்டணி கட்சி 136 முதல் 151 இடங்களில் வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ்
அது போல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 8 முதல் 14 இடங்களில் வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் சொல்கின்றன. அது போல் காங்கிரஸ் கட்சியோ 6 முதல் 11 இடங்களில் வெல்லவே வாய்ப்பிருக்கிறது. இந்த கணிப்புகளில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி ஆகிய மாநில கட்சிகளில் சமாஜ்வாதி ரேஸில் உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி
அது போல் பழமையான காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜை காட்டிலும் குறைந்த இடங்களில் வெல்லும் என கணிப்புகள் சொல்வது கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த சர்வேயில் உத்தரப்பிரதேசத்தில் மக்களுக்கு பிடித்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு யோகி ஆதித்யநாத் என 53.4 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர். அது போல் 31.5 சதவீதம் பேரின் சாய்ஸ் அகிலேஷ் யாதவாக உள்ளது. மாயாவதி சிறந்த சாய்ஸ் என 11.5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அது போல் பிரியங்கா வதேகா முதல்வராக 2.5 சதவீதம் பேரே விரும்பியுள்ளனர்.

யோகியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்
அது போல் தற்போதைய முதல்வர் யோகியின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக 47.41 சதவீதம் பேரும் திருப்தியில்லை என 41.20 சதவீதம் பேரும் இன்னும் முடிவு செய்யவில்லை என 11.39 சதவீதம் பேரும் சொல்லியுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் ஆலயம் விரிவாக்க பணிகள் மூலம் பாஜகவுக்கு பலன் கிடைக்கும் என 57.84 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஆனால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என 36.73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு
அது போல் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் முக்கிய பிரச்சினைகள் வேலைவாய்ப்பு, வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, ஜாதி மதம் ஆகியவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் வேலைவாய்ப்பு உள்ளது. புதிதாக உருவாகும் அரசு வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என 34.4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications