டைம்ஸ் நவ் - விஎம்ஆர் சர்வே: வங்கத்தில் மமதா.. ஜார்கண்டில் காங்கிரஸ்.. பரபர கருத்து கணிப்பு!
2019 லோக் சபா தேர்தலில் ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்டில் யாருக்கு வெற்றி என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video

டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்டில் யாருக்கு வெற்றி என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக் சபா தேர்தல் கருத்து கணிப்புகள் வரிசையாக தற்போது வெளியாகி வருகிறது.தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பல இப்போதே வெளி வர தொடங்கி இருக்கிறது.
தற்போது லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு மாநில வாரியாக வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க கணிப்பு
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களை வெல்லும். பாஜக இரண்டு இடங்களை வெல்லும். காங்கிரஸ் ஒரு இடத்தை மட்டுமே பிடிக்கும். மற்றவை 7 இடங்களை பிடிக்கும்.

பீகாரில் நிலை
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் பீகாரில் 40 இடங்களில் பாஜக கூட்டணி 25 இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் கூட்டணி 15 இடங்களை பிடிக்கும்.மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

ஜார்கண்டில் நிலை
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் ஜார்கண்டில் 14 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களை கைப்பற்றும். பாஜக கூட்டணி 6 இடங்களை மட்டுமே பெறும். மற்ற கட்சிகள் எதற்கும் ஜார்கண்ட்டில் வெற்றிவாய்ப்பு இல்லை.

ஒடிசாவில் என்ன
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் ஒடிசாவில் 21 இடங்களில் பாஜக 13 இடங்களை வெல்லும். பிஜு ஜனதா தளம் மொத்தம் 8 இடங்களை வெல்லும்.மற்ற கட்சிகள் இங்கு பெரிய வெற்றியை பெறாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications