அது என்ன மோடி திறந்து வைத்த அசோக சிங்கங்கள் ஆக்ரோஷமாக உள்ளன.. இது அவமதிப்பு: திரிணாமுல் தலைவர்கள்
டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் இடம்பெற்றுள்ள அசோக சிங்கங்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டடிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த கட்டிடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் மற்றும் கூட்டு கூட்டத்திற்கு 1, 272 இடங்களும் இடம் பெறும் என கூறப்படுகிறது. ரூ.971 கோடி ரூபாய் மதிப்பில், 62,000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனை தாங்கும் வகையில் இந்த பிரமாண்ட நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கூரையில் தேசிய சின்னத்தை வார்ப்பதற்கான கருத்துரு மற்றும் செயல்முறையானது களிமண் மாடலிங் மற்றும் கம்ப்யூட்டர் கிராஃப்பிக்ஸ் முதல் வெண்கல வார்ப்பு மற்றும் மெருகூட்டல் வரை 8 வெவ்வேறு நிலைகளில் தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மேல்கூரையில் 6.5 மீட்டர் நீளமும், 9.5 டன் எடையும் உடைய வெண்கலத்திலான பிரமாண்ட தேசிய சின்னத்தை பிரதமர் நேற்று திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டத்தின் மீது தேசிய சின்னம் திறந்து வைக்கப்பட்டதில் குறைபாடு உள்ளதாக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமரின் இந்த செயல், அரசியலமைப்பு மீறல் என குற்றம்சாட்டின.

இதனிடையே, தேசிய சின்னத்தை பிரதமர் மோடி அவமானப்படுத்தி விட்டதாக திரிணாமுல் காங்கிஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அக்கட்சியின் எம்.பிக்களான ஜவஹர் சிர்கார் மற்றும் மஹுவா மொத்ரா ஆகியோர் புதிய நாடாளுமன்ற கட்டத்தின் மேல் நிறுவப்பட்டுள்ள தேசிய சின்னத்தின் அசோக சிங்கத்தை அவமதித்துவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், மாநிலங்களவை உறுப்பினர் ஜவர் சிர்கார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நமது தேசிய சின்னத்தில் உள்ள சிங்கம் சாந்தமாக அதேவேளையில் கம்பீரமாக தோற்றமளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், புதிதாக நிறுவப்பட்டுள்ள சிலையில் உள்ள சிங்கம், ஆக்ரோஷமாக இருப்பதுபோல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதோடு அதன் உருவம் சீராக உள்ளாமல் அதிக அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடது புறத்தில் அழகாக உள்ளது அசல் என்றும், வலதுபுறத்தில் வைக்கப்பட்டிருப்பது மோடியின் பதிப்பு என்றும் விமர்சித்தார். இந்த அவமானத்தை உடனே மாற்றுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொத்ரா, அசோக சிங்கங்களின் பக்கவாட்டு படத்தை ட்வீட் செய்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கூரையில் நிறுவப்பட்ட வெண்கல மற்றும் எரிந்த வார்ப்புகளுடன் கடந்தகால சிற்பத்தை ஒப்பிட்டுள்ளார்.
முன்னாக, டி.எம்.சி. எம்.பி. ஜவர் சிர்கார் கூறுகையில், நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற எம்.பிக்களுடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என கூறினார். மேலும், மோடி தனது க்ரோனி கட்டிடக் கலைஞரால் அதிக செலவில் வடிவமைக்கப்பட்ட ஒரு சாதாராண கட்டிடக்கலை மூலம் சிதைத்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும், ஊடகப் பொறுப்பாளருமான அனில் பலுனி தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டது துரதிருஷ்டமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications