மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் மம்தா... பாஜக அசுர வளர்ச்சி.. காங். எங்கே? ஏபிபி கருத்துக்கணிப்பு
டெல்லி: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்குகிறது.
அதேபோல கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போலவே இந்த முறை சட்டசபை தேர்தலில் பெரியளவு வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.

மூன்றாவது முறையாக மம்தா
இந்நிலையில், மேற்கு வங்க தேர்தல் குறித்த ஏபிபி கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. 43% வாக்குகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஏபிபி கருத்துக்கணிப்பில் தகவல்.

பாஜக அசூர வளர்ச்சி
அதேநேரம் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இந்த முறை 98 முதல் 114 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜக பக்கம் வந்தது இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தேயும் காங்கிரஸ்
ஒரு காலத்தில் மாநிலத்தில் மிகவும் வலுவாக இருந்த இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி, இந்த முறை வெறும் 23 முதல் 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்தக் கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 25% வாக்குகளைப் பெற்ற காங்கிரசின் வாக்கு வங்கி இந்த முறை 13% குறையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முதல்வர் வேட்பாளர்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய முதல்வருமான மம்தா பானர்ஜி சிறந்த முதல்வர் வேட்பாளர் என்று 52.2% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவின் திலீப் கோஷ் சிறந்த முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று 26.8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி சிறந்த முதல்வர் வேட்பாளராக இருப்பார் என 2.4% பேர் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications