பார்த்தவுடன் சிரித்த நிர்மலா சீதாராமன் - தங்கம் தென்னரசு..டெல்லியில் நடந்த மீட்டிங்! பக்கத்துல யாரு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி இருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி மத்திய பாஜக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி அறிமுகமாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், இன்று 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.

 TN finance minister Thangam thennarasu meet Union finance minister Nirmala sitharaman

இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், மத்திய அரசின் நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதேபோன்று தமிழ்நாட்டின் சார்பில் நிதியமைச்சராக அண்மையில் பதவியேற்ற தங்கம் தென்னரசு இதில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் அவர் டெல்லி சென்று உள்ளார்.

நேற்று டெல்லிக்கு சென்ற அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், தமிழ் நாடு இல்லம் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, துணை செயலாளர் (வரவு செலவு) திரு. பிரதிக் தயாள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசப்படும் விவகாரங்கள் தொடர்பாகவும், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி பங்களிப்பு, ஜிஎஸ்டி பாக்கி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோவுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என மாநில நிதியமைச்சா்கள் குழுவின் பரிந்துரை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோல், புற்றுநோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு வழங்குவது பற்றியும், மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்திய விண்வெளித் துறையில் தனியாா் நிறுவன பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், அந்த நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதல சேவைக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் எஸ்யுவி கார்களை போன்றே எம்யுவி வாகனங்களுக்கும் 22 சதவீதம் செஸ் வரி விதிப்பது குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+