தமிழக ஆளுநர் பன்வாரிலால் மாற்றப்படுகிறாரா? மகாராஷ்டிரா ஆளுநராகும் சுமித்ரா மகாஜன்? புதிய தகவல்கள்
டெல்லி: மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மாற்றவும் ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பு வந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களை நாட்டின் பல்வேறு பெரிய மாநிலங்களுக்கு ஆளுநர்களாக கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது.

இதன்படி பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 76 வயதாகி விட்டதால் அவரை தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு மோடியும், அமித்ஷாவும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் சுமித்ரா மகாஜனுக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமித்ரா மகாஜனுக்கு பூர்வீக மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். அந்த மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில்தான் அவர் பிறந்தார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஜெயந்த் மகாஜனை திருமணம் செய்த பிறகு இந்தூரில் குடியேறி விட்டார். எனவே மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி சுமித்ரா மகாஜன் வழங்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. விரைவில் சுமத்ரா மகாஜன் மகாராஷ்டிரா ஆளுநராக பொறுப்பேற்பார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் தான் பாஜக மூத்த தலைவர்களை ஆளுநராக கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக சில மாநில கவர்னர்களை மாற்றவும் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மாற்றவும் ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வந்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் ஆளுநர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications