தமிழ்நாட்டுக்கு வரும் 80 TMC நீரை தடுக்கவே கர்நாடகா புதிய அணை கட்ட முயற்சிக்கிறது - தமிழக அரசு வாதம்
டெல்லி: மேகதாது அணை கட்ட நதிநீர் ஆணையம் ஒப்புதல் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி நீரை தடுக்கவே கர்நாடகா புதிதாக அணை கட்ட முயற்சிக்கிறது என தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
மேலும், "மேகதாது அணை கட்ட நதிநீர் ஆணையம் ஒப்புதல் தர முடியாது. காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை. காவிரியில் குறுக்கே புதிதாக அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி தண்ணீர் தடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பல நேரங்களில் காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா இருந்திருக்கிறது. 80 டிஎம்சி நீரை தடுக்கவே கர்நாடகா புதிதாக அணை கட்ட முயற்சிக்கிறது" எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி, கேரள அரசும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ்












Click it and Unblock the Notifications