பொது சிவில் சட்டம்.. 50 லட்சம் கருத்துக்களை பெற்ற சட்ட ஆணையம்! காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது
டெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக தற்போது வரை சுமார் 50 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் கருத்துக் கேட்பு நிறைவுறுகிறது.
திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினரையும் ஒரே மாதிரியான சட்டத்திற்குள் கொண்டு வர பொது சிவில் சட்டம் வழிவகை செய்கிறது. பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் இந்த சட்டத்தை அமல்படுத்துவோம் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பொது சிவில் சட்டம் குறித்து பேசினார். இதனையடுத்து இது குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க தொடங்கின.

கடந்த மாதம் 14ம் தேதி 22வது சட்ட ஆணையம் இது குறித்து கருத்து தெரிக்குமாறு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஏற்கெனவே 21வது சட்ட ஆணையம் இந்த பொது சிவில் சட்டம் குறித்து எதிர்மறையான கருத்தை கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் இது குறித்து சட்ட ஆணையம் கருத்து கேட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
அதேபோல இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில், நாட்டில் உள்ள பல்வேறு மதத்தினர் தங்களுக்கென தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், மத அடிப்படையில் அல்லாமல், அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்டத்தை கொண்டு வரப்போகிறோம் என்று பாஜக அரசு அறிவித்து இருந்தாலும், நடைமுறையில் இஸ்லாமியர்களை குறிவைத்தே, பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்களை துவங்கியுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனம், சாதி, மதம், பண்பாடு, பழக்க வழக்கங்களைக் கொண்ட நாட்டிற்கு ஒரே மாதிரியான சட்டம் என்பது சரிவராது, மாறாக அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாக முடியும் என்று இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமிய அமைப்புகளை கடந்து சீக்கியம், புத்தம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்தவர்களும் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 22வது சட்ட ஆணையம் அறிவித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. தற்போது வரை சுமார் 50 லட்சம் கருத்துக்கள் இந்த பொது சிவில் சட்டம் குறித்து வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications