கொரோனா வைரஸ் பாதிப்பில் ஒரு கோடியை தொட்ட இந்தியா.. அதிக பாதிப்பு கொண்ட முதல் 10 மாநிலங்கள் எவை?
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் நாட்டில் அதிக பாதிப்புகளை சந்தித்த 10 மாநிலங்கள் எவை எவை தெரியுமா, அதில் உங்கள் மாநிலம் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டும்.
Recommended Video

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது. இதுவரை இந்தியாவில் 95 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் 1.45 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் முதல் 10 இடங்களை பிடித்துள்ள இந்திய மாநிலங்கள் எவை எவை என்பதை பார்ப்போம். அவற்றில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா, இங்கு 18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரை 17 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இதற்கடுத்த இடத்தில் இருப்பது கர்நாடகா , இங்கு 9.07 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 8.79 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்.
ஆந்திராவில் கொரோனாவிலிருந்து 8.77 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 8.66 லட்சம் மக்கள் மீண்டுள்ளார்கள். இந்தியாவில் 4 இடத்தில் இருக்கிறது தமிழகம். முதலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் நல்லதொரு மாற்றமாக தற்போது 4ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
இங்கு 8.04 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்களில்7.82 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். 5ஆவது இடத்தில் 6.93 லட்சம் கொரோனா பாதிப்புடன் கேரளா உள்ளது. இங்கு 6.32 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள்.
6ஆவது இடத்தில் டெல்லி, இங்கு 6.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5.93 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 7ஆவது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்திலிருந்து 5.72 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். 5.46 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்.
8ஆவது இடத்தில் மேற்கு வங்கத்திலிருந்து 5.32 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5.04 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள். அது போல் 9ஆவது இடத்தில் 3.25 லட்சம் பாதிப்புகளுடன் ஒடிஸாவும் , 10 இடத்தில் 2.97 லட்சம் பாதிப்புகளுடன் ராஜஸ்தானும் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications