அமித்ஷா முதல் ஜேட்லி வரை.. மருத்துவமனையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள்.. வருத்தத்தில் தொண்டர்கள்
பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலர் கடந்த 24 மணி நேரத்தில் வரிசையாக மருத்துவமனையில் அனுமதி ஆகி இருப்பது பாஜக தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

டெல்லி: பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கடந்த 24 மணி நேரத்தில் வரிசையாக மருத்துவமனையில் அனுமதி ஆகி இருப்பது பாஜக தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் லோக் சபா தேர்தலுக்காக பாஜக கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதியாகி உள்ளனர்.
பல்வேறு உடல் பிரச்சனை காரணமாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அமித் ஷா
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சோதனையில் அவருக்கு எச்1என்1 வைரஸ் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அதன்படி அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அமித் ஷாவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடைய தற்போதைய உடல்நிலை குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அருண் ஜேட்லி பாதிப்பு
பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வருடம் அருண் ஜேட்லிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்தே அவருக்கு உடலில் அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சரி செய்யப்படுகிறது. உடலில் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கிறார்.

ரவிசங்கர் அனுமதி
மேலும் பாஜகவை சேர்ந்த இன்னொரு முக்கிய தலைவரான மத்திய சட்டம் & தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவரது தற்போதைய உடல்நிலை குறித்த விவரம் வெளியாகவில்லை.

இரண்டு பேர்
இது மட்டுமில்லாமல் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் லால் உடல்நலக்குறைவு காரணமாக நொய்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி
இந்த தொடர் சம்பவங்கள் பாஜக உறுப்பினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது பாஜக தொண்டர்களுக்கு வருத்தத்தையும், சோகத்தையும் தந்துள்ளது. இவர்கள் விரைவில் உடல்நலம் பெற்றுவர வேண்டும் என்று பாஜகவினர் மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியினரும் இவர்கள் நலம்பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications