Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிக வரி செலுத்தும் பிரபலங்கள்.. இந்திய அளவில் நம்பர் -2 இடத்தில் ’தளபதி’ விஜய்! முதலிடத்தில் யாரு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அளவில் அதிக அளவில் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலை ஃபார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் அதிக வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பிடித்துள்ளார்.

தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் பிரபலங்களை திரையில் மட்டுமல்ல தரையிலும் ஹீரோக்களாக பார்ப்பவர்கள் இந்திய ரசிகர்கள். ஷாருக்கான் என்றால் இந்தியாவை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற வேண்டும், விராட் கோலி உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என எப்போதும் அவர்கள் விரும்புகிறார்கள்.

shah rukh khan actor vijay cinema

தங்கள் நாட்டுக்காக போராடும் ஹீரோக்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஏற்கனவே சொன்னது போல திரையில் மட்டுமல்ல தரையிலும் அவர்கள் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தங்கள் தலைவனை சிறு குறை கூறிவிட்டால் கூட அவர்களால் தாங்க முடியாது. அப்படி தரையிலும் திரையிலும் நிஜ ஹீரோக்களாக இருக்கும் சிலர் குறித்து பார்க்கலாம். பொதுவாக நாட்டின் மக்கள் செலுத்தும் வரியின் அடிப்படையிலேயே இந்த தேசம் கட்டி எழுப்பப்படுகிறது. அந்த வகையில் நாட்டில் வரி செலுத்துவது அடிப்படை கடமைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சில பிரபலங்கள் தங்கள் வருமானத்தை மறைத்து அவற்றை கருப்பு பணமாக சேர்த்து வைத்திருக்கின்றனர். வெகு சிலரே தங்களது உண்மையான வருமானத்தை கூறி முறையாக வருமான வரி செலுத்துகின்றனர்.

அந்த வகையில் இந்திய அளவில் அதிக அளவில் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலை ஃபார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டு அதிக வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலில் திரைப்படம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

2024 ஆம் நிதி ஆண்டில் அதிக வரி செலுத்துவோர் பட்டியலில் யார் முதல் இடத்தில் இருப்பது யார் என்பது பற்றி சொல்ல தேவையில்லை. காரணம் பதான், ஜவான், டங்கி ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஷாருக் கான் தான் முதல் இடத்தில் இருக்கிறார். மொத்தம் 92 கோடி வரி செலுத்தி ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். ஜனவரி 2023 இல் வெளியான திரைப்படமான பதான், உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த ஆண்டின் அவரது இரண்டாவது வெளியீடான ஜவான் முந்தைய எதிர்பார்ப்புகளை மீறி ரூ.1100 கோடியை எட்டியது. இருப்பினும், கடைசியாக வெளியான டங்கி 400 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஆண்டாக இருந்த நிலையில் ஷாருக் கான் அதிக சம்பளம் வாங்கிய நடிகராக இருந்தார். அதே நேரத்தில் அதற்கான வரியாக 92 கோடியை செலுத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை தென் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே பிரபலம் என்றால் அது நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தான். கடந்த 2023-24 காலத்தில் மட்டும் விஜய் சுமார் 80 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தியிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான லியோ, தி கோட் படங்கள் மொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதில் விஜய் சுமார் 400 கோடி ரூபாயை வருமானமாக பெற்று இருக்கலாம் என கூறப்படும் நிலையில் 80 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் இந்திய அளவில் ஷாருக்கானுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் விஜய் இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் இருக்கிறார் சல்மான் கான். அவர் சுமார் 75 கோடியை வருமான வரியாக செலுத்தி இருக்கிறார். நான்காவது இடத்தில் 71 கோடியை செலுத்திய அமிதாப்பச்சனும், ஐந்தாவது இடத்தில் 42 கோடி வருமானவரி செலுத்திய அஜய் தேவ்கானும் இருக்கின்றனர். அதற்கு அடுத்த இடங்களில் ரன்வீர் கபூர், ரித்திக் ரோஷன், கபில் சர்மா, கரீனா கபூர், ஷாகித் கபூர், மோகன்லால், அல்லு அர்ஜுன், கேத்ரினா கைஃப் ஆகியோர் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+