இன்று முழு சந்திரகிரகணம்.. வானில் தோன்றும் ரத்த நிலா.. இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் தெரியும்?
டெல்லி: இந்தியாவில் இன்று மாலை 3.15 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடியும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி ரத்த நிலா என்கிற அரிய நிகழ்வு இன்று வானில் தோன்றும்.
Recommended Video
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். இதில் முழு சந்திர கிரகணம் என்பது 3 ஆண்டுகளுக்கு இரு முறை நிகழும் அற்புத நிகழ்வாகும்.
முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு கூடுதல் ஒளியுடன் ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும். இதனால் இதனை ரத்த நிலா என அழைக்கிறார்கள்.

புவி வளி மண்டலம்
சூரிய ஒளி, புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து நிலவை சென்றடைவதால் நிலா இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் மின்னும். இந்த அரிய நிகழ்வு இந்தியாவில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி மாலை 6.22 மணிக்கு நிகழ்கிறது.

இந்தியா
மாலை 4.41 முதல் 4.56 வரையில் 15 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் நிகழும். கிரகணத்தின் போது இந்தியாவை பொருத்தவரை நிலவு கிழக்கு அடிவானத்தின் கீழே இருக்கும். இதனால் தமிழகத்தில் ரத்த நிலாவை காண முடியாது. சில நிமிடங்கள் மட்டுமே இந்த கண்கொள்ளா காட்சியை காண முடியும்.

மத்திய புவி அறிவியல் அமைச்சகம்
இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பகுதியளவு சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காண முடியும் என்று தெரிவித்துள்ளது. மாலை சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.

முழு சூரிய கிரகணம்
சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சூரிய கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும். அதை தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.

பிளட் மூன்
இதை சூப்பர் மூன் அல்லது பிளட் மூன் என கூறலாம். இன்று நிலவு வழக்கத்தை விட பெரியதாகவே தெரியும். இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி காணலாம்.












Click it and Unblock the Notifications