பரவும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை 81ஆக உயர்வு.. எந்த மாநிலத்தில் எவ்வளவு?
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில், சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால், இன்று மாலை நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது, இது 81ஆக உயர்ந்ததாக தெரிவித்தார்.

அதில் 64 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கனடா நாட்டுக்காரர் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதை பாருங்கள்: இந்தோ-வங்கதேசம் இடையே பயணிகள் பேருந்துகள் / ரயில்கள் ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தோ-நேபாள எல்லையில் 4 சோதனைச் சாவடிகள் செயல்படும். பூட்டான் மற்றும் நேபாள நாட்டினருக்கு விசா இல்லாத நுழைவு வசதி தொடரும்.
பெரிய மற்றும் சிறு துறைமுகங்களில் 25,504 பயணிகள் கூடுதலாக ஸ்கிரீன் செய்யப்பட்டனர். 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் லேன்ட்போர்ட்களில் ஸ்க்ரீன் செய்யப்பட்டனர்.
அரசு 42,296 பயணிகளை சமூக கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது, அவர்களில் 2,559 பேருக்கு அறிகுறிகள் தென்பட்டன, அதில் 172 வெளிநாட்டினர் உட்பட 522 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
4 மருத்துவர்கள் அடங்கிய குழுவை அரசு ரோம் நகருக்கு அனுப்பியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கொரோனாவால் இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பாருங்கள்:
கேரளா 19, மகாராஷ்டிரா 14, உத்தர பிரதேசம் 10 + 1 வெளிநாட்டுக்காரர், கர்நாடகா 6, டெல்லி 6, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, பஞ்சாப் ஆகியவற்றில் தலா 1, லடாக் 3, ஜம்மு காஷ்மீர் 1 ஆகியவை இந்த பட்டியலில் உள்ளன. ஹரியானாவில் 14 வெளிநாட்டினர், ராஜஸ்தானில் 2 இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.
கர்நாடகாவில் இந்த நோயால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கேரளாவில், இந்த வியாதி குணமாகி 3 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று கூறியுள்ளது அந்த புள்ளி விவரம்.
இதனிடையே, மார்ச் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் போட்டித் தொடர், ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான, 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அடுத்த ஒரு வாரத்திற்கு, தியேட்டர்கள் மூடப்படும், மால்கள் செயல்படாது, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications