வெறும் 10 நாளில் மத்திய அரசு 2 மேஜர் குட்நியூஸ்.. மோடியின் அடுத்த பெரிய அஸ்திரம் இதுவா?
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு பெரிய அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டுள்ளது. முதலில் பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளத. அடுத்ததாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த பாஜக அடுத்து ஐந்து வருடங்களில் நடந்த தேர்தலில்.. அதாவது 2019ம் ஆண்டுநடந்த தேர்தலில்300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தது.. முதல் ஐந்து ஆண்டுகளை விட அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பல்வேறு மாநிலங்களில் விட்டு மாநிலங்களவையிலும் கிட்டத்தட்ட மெஜாரிட்டி நிலையில் இருக்கிறது பாஜக..

மூன்றாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெல்லும் முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். நாட்டின் 17 மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை 400 தொகுதிகளாவது வெல்ல வேண்டும் என்று பாஜக மேலிடம் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாகும் அளவிற்கு 54 தொகுதிகளை கூட வெல்லவில்லை.. படுதோல்வியை சந்திதத்து.
2024 தேர்தல் திடீர் திருப்பமாக முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாமே பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளன. வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கியை காலி செய்த வந்த ஆம் ஆத்மி இந்த முறை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், உத்தரப்பிரதேசத்தில் சாமாஜ்வாதியும், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத்பவார்) உள்ளிட்டவையும் காங்கிரஸ் உடன் இணைந்து சந்திக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக உடன்இணைந்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்த முறை பாஜகவை எதிர்க்க உள்ளன. இதனால் பாஜக கடந்த தேர்தல் போல் இல்லாமல் இந்த முறை, தேர்தல் யுக்தியை பெரிய அளவில் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் ரயில் கட்டணம்: இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு பெரிய அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டுள்ளது. முதலில் பயணிகள் ரயில் கட்டணத்தை குறைத்தது. பயணிகள் ரயில்களில் 2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காலம் தொடங்குவதற்கு முன் டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தொடங்கிய போது ஊரடங்குக் கட்டுப்பாடுகளுடன், ரயில்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ரயில் கட்டணம் குறைப்பு: 200 கிலோ மீட்டருக்குக் குறைவான தூரம் இயக்கப்படும் ரயில்கள் விரைவு ரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதாவது பயணிகள் ரயில்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு 30 ரூபாயாக்கப்பட்டது.கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய போதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டணம் குறைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பயணிகள் ரயில்களில் 20 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படுவதாக ரயில்வே அதிரடியாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி அறிவித்தது. மேலும் பயணிகள் ரயில்களில் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் ரயில்வே அறிவித்தது. எந்த முன்னறிவிப்பும் இன்றி பயணிகள் ரயிலில்களில் கட்டணம் குறைக்கப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சிலிண்டர் விலை குறைப்பு: அடுத்ததாக மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது பெண் சக்திக்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும், மத்திய அரசின் முடிவு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு 'வாழ்க்கையை எளிதாக்குவதை' உறுதிசெய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு?: டுத்தடுத்து சமானியர்கள், ஏழைகள் நேரடியாக பயன்பெறும் அறிவிப்பினை வெளியிட்டுள்ள மத்திய அரசு, அடுத்ததாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை கடந்த 2022ம் ஆண்டு கணிசமாக குறைத்தது. அதாவது பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ.10-ம் குறைத்தது. இந்நிலையில் தற்போது அந்த அளவிற்கு குறைக்க வாய்ப்பு இல்லை என்றாலும், 5 முதல் 10 ரூபாய் வரை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோக்சபா தேர்தல் தொடர்பான அறிவிப்பு அனோகமாக அடுத்த ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
-
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications