ஒரு ரயில் டிக்கெட் ரூ 10 லட்சமா? அப்படி அந்த ரயிலில் என்னதான் இருக்கிறது? தலைகீழாக ரயில் போகுமோ?
டெல்லி: ஒரு ரயிலில் ஒரு டிக்கெட் ரூ 10 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி இந்த ரயிலில் என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ரயில் பயணம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது. இதற்கு டிக்கெட் கட்டணம் குறைவு, உடல் அசதி தெரியாது என சொல்லப்பட்டாலும் பல வண்டிகள் சிக்னலில் காத்திருக்க ரயில் கெத்தாக ஹாரன் அடித்துக் கொண்டே செல்லும் அழகு இருக்கே அப்பப்பா!
இத்தனை நீளமான ரயிலில் பயணிப்பது ரயில் தண்டவாளம் மாறும் போது அது திரும்பும் அழகை மற்ற பெட்டிகளில் அமர்ந்து கொண்டு நாமே ரசிபப்தும் வியக்கத்தக்கதாகும். உயிருக்கு ஆபத்து என்றாலும் ரயிலில் தொங்கிக் கொண்டே போக சிலருக்கு பிடிக்கும்.

சிலருக்கு ரயிலில் அனுமதிக்கப்பட்ட பெட்டிகளில் நடந்து செல்ல ஆசையாக இருக்கும். நம்மில் எப்படி ஏழை, நடுத்தரம், பணக்காரர் என்ற நிலை இருப்பதை போல் ரயில்களிலும் சொகுசு ரயில்கள் உள்ளன. சும்மா நட்சத்திர ஹோட்டல்கள் போல் ரயில்கள் இருக்கும். அறைகள் எல்லாம் சூப்பராக இருக்கும். விசாலமான கண்ணாடிகள் இருக்கும். வகை வகையான உணவுகள் இருக்கும்.
இப்படி சொகுசு வசதிகள் கொண்ட ரயில் நிறைய இருக்கின்றன. அவற்றில் Palace on Wheels என்ற ரயில் குறித்து பார்ப்போம். இந்த ரயிலில் 8 நாட்கள் முதல் 13 நாட்கள் வரை பயணம் செய்யலாம். இதற்கு கட்டணமாக ரூ 1 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டெல்லி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஸ்வாய், மோத்பூர், சித்தூர்கர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பாரத்பூர், ஆக்ரா வழியாக இந்த ரயில் மீண்டும் டெல்லியை அடைகிறது. இந்த ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலும் பயணிக்கிறது.
அடுத்தது, டெக்கான் ஒடிஸி ரயில். இந்த ரயில் மும்பை, உதய்பூர், ரன்தம்போர், ஜெய்ப்பூர், ஆக்ரா வழியாக டெல்லி செல்கிறது. 7 இரவு, 8 பகல் என பயணிக்கக் கூடிய இந்த ரயிலில் ரூ 3 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல 8 பகல், 7 இரவு பயணிக்கும் டெல்லி, ஜோத்பூர், உதய்ப்பூர், சித்தூரகர், சவாய் மோத்பூர், ஜெய்ப்பூர், கஜுராஹோ, வாரணாசி, ஆக்ரா வழியாக மீண்டும் டெல்லியை அடையும் பயணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது.

அது போல் மகாராஜா எக்ஸ்பிரஸ் என ஒன்று உள்ளது. இங்கு நாம் தேர்வு செய்யும் வழித்தடத்தை பொருத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டே முக்கால் லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தாஜ்மஹால், கஜுரஹோ,பதேபூர் சிக்ரி, வாரணாசி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கிறது.இதில் 23 கோச்சுகள் உள்ளனர். 88 பேர் வரை பயணம் செய்யலாம். இங்கு இரு ரெஸ்டாரன்டுகள் உள்ளன. 8 பகல், 7 இரவு பயணிக்கும் கோல்டன் சேரியட் ரயில் தென் மாநிலங்களில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்கிறது. இதற்கு இரு வழித்தடங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு வழித்தடம் சென்னை, மாமல்லபுரம், புதுவை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லும்.
இந்த ரயிலில டீலக்ஸ் கேபினுக்கு ரூ 5 லட்சமும் ஜூனியர் சூட்டிற்கு ரூ 7 லட்சமும் வசூல் செய்யப்படுகிறது. இருவர் ஷேர் செய்து கூட இந்த ரயிலில் செல்லலாம். ஒரு நாளைக்கு ரூ 33,250 என்ற அடிப்படையில் இருவர் தங்கலாம். ஒருவர் தங்குவதற்கு 53,200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications