ஆகஸ்ட் 4.. நாடாளுமன்றத்தை அதிரவைக்க போகும் பேரணி.. அதிர்ச்சியில் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜென் சி இளைஞர்களின் போராட்டம் மத்திய அரசை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. உலகமே ஆச்சர்யத்துடன் பார்த்த மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்த சில நாட்களில் தலைநகர் டெல்லி மற்றொரு போராட்டத்தை சந்திக்கவுள்ளது. எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் பயன்பாட்டை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக டெல்லியில், வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்துவதற்கு போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டுள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்டி கட்சி போராட்டம் நடத்தியது. இதில் மாணவர்களும் தன்னெழுச்சியாக கலந்து கொண்டனர். இந்த போராட்டம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்தது. இது இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர் போராட்டத்தின் பலனாக தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் டெல்லி மற்றொரு போராட்டத்தை சந்திக்க தயாராகி வருகிறது.

E 20 Petrol

டெல்லியில் பிரம்மாண்ட பேரணி

இ20 எனப்படும் 20 % எத்தனால் கலந்த பெட்ரோலை திரும்ப பெற வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பேரணி நடத்த போவதாக போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போர் பதற்றம் உள்ளிட்ட சர்வதேச சூழல்களால் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்காக மத்திய அரசு 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து டெல்லி கால் டாக்ஸி, சுற்றுலா போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இ 20 எத்தனால் கலந்த பெட்ரோலை திரும்ப வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த பேரணிக்கு பல்வேறு போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.

இ 20 பெட்ரோலால் பாதிப்பு

அவர்களின் மௌனத்தை கலைப்பதற்காக தான் பேரணி செல்கிறோம். ஏற்கனவே எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக நாடு முழுவதும் வாகனங்களில் ஏராளமான புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே இந்த முடிவை திரும்ப பெற வேண்டும். எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் பயன்பாட்டை மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. விரும்பும் மக்கள் அதைத் தாராளமான பயன்படுத்தலாம். ஆனால் அரசு அதை கட்டாயப்படுத்த கூடாது.

இ20 பெட்ரோல் பயன்பாடால் வாகனங்களின் மைலேஜ் குறைவதுடன், இன்ஜின் சேதமடையவும் வாய்ப்புள்ளது. நாங்கள் இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. சமூக வலைதளங்களில் செயல்பட்டு வரும் இ20 ஜனதா பார்ட்டி உள்ளிட்ட எந்த கட்சியுடனும் எங்களுக்கு தொடர்பு இல்லை" என்று கூறினார். இந்த பேரணிக்கு சமூகவலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

மத்திய அரசு விளக்கம்

ஆனால் மத்திய அரசு, "விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் தான் இ20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது" என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+