பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து அணிந்திருந்த கவுன் கண்ணுக்குள்ளயே நிற்குதே! டிசைன்லாம் யார் தெரியுமா?
டெல்லி: இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஹர்னாஸ் சாந்துவின் உடையை டிசைன் செய்தது திருநங்கை சாயிஷா ஷிண்டே.
இஸ்ரேல் நாட்டில் எய்லாட் நகரில் நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த பட்டத்தை வென்றது பெருமைக்குரியதாகும். கடந்த 2000 ஆம் ஆண்டு கடைசியாக பிரபஞ்ச அழகியாக இந்தியரான லாரா தத்தா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் எய்லாட் நகரில் இருந்தபடியே ஹர்னாஸ் சாந்து ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் என் மீது நம்பிக்கை வைத்து என் மீது பலர் அன்புமழை பொழிந்தனர். அவர்களுக்காக எனது இதயம் முழுவதும் மரியாதை நிரம்பி உள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

எனது வெற்றி
எனது வெற்றியை தொடர்ந்து, என்னை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க பலர் விரும்புகிறார்கள். நானும் பெரிய திரையில் எனது திறமையை காட்ட விரும்புகிறேன். ஹிந்தி படங்களில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன் என்றார்.

அழகி
ஹர்னாஸ் அழகி போட்டியில் சில்வர் நிறத்தினாலான ஒரு நீள கவுனை அணிந்திருந்தார். அந்த கவுன் திருநங்கை சாயிஷா ஷிண்டேவால் டிசைன் செய்யப்பட்டது. அவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் திருநங்கையாக மாறினார். இதுகுறித்து சாயிஷா கூறுகையில், எனது 20 வயதில் நான் நிப்டில் இணைந்து பேஷன் டிசைனிங் பயிற்சியை எடுத்தேன்.

ஓரின சேர்க்கையாளர்
அங்குதான் என்னுள் இருந்த உண்மையை நான் புரிந்து கொண்டேன். நான் ஓரினச் சேர்க்கையாளராக இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக ஆண்கள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் எனக்கு இந்த ஆண்டுதான் நான் ஓரின சேர்க்கையாளர் அல்ல. நான் ஒரு திருநங்கை என்பது புரிந்தது. சாயிஷா என்றால் வாழ்க்கை அர்த்தமுள்ளது என அர்த்தம். அதை அடைய நான் திட்டமிட்டேன். இன்று சாதித்துவிட்டேன் என்றார்.

கற்கள் பதிப்பு
அந்த கவுனில் கை வேலைப்பாடுகள், கற்கள் உள்ளிட்டவை இருந்தன. இந்த புகைப்படத்தை பெரிய பெரிய டிசைனர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இதுவரை பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் கான், தீபிகா படுகோன், டாப்சி, அனுஷ்கா சர்மா, கத்ரீனை கைஃப், மாதுரி தீட்சித் உள்ளிட்டோருக்கு சாயிஷா ஆடைகளை வடிவமைத்துள்ளாராம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications