நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் நியமனம்! திருச்சி சிவா, கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு
டெல்லி: நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தொழிற்சாலைகள் விவகார துறையின் நிலைக்குழு தலைவராகவும், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி, நுகர்வோர் விவகார துறையின் நிலைக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுத் துறைகள் தொடர்புடைய நிலைக் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 24 நிலை குழுவுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். 24ல் 11 நிலைக்குழுவின் தலைவர்களாக பாஜக எம்பிக்களும், அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் 4 பேருக்கு தலா ஒரு நிலைக்குழு தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளை பொறுத்த அளவில், காங்கிரஸ் எம்பிக்கள் 4 நிலைக்குழுவின் தலைவர்களாகவும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்களுக்கு தலா இரண்டு நிலைக்குழுவின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

தவிர சமாஜ்வாதி கட்சிக்கும் ஒரு நிலைக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. திமுகவை பொறுத்த அளவில் கனிமொழி, நுகர்வோர் விவகார துறையின் நிலைக்குழு தலைவராகவும், திருச்சி சிவா, தொழிற்சாலைகள் விவகார துறையின் நிலைக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கட்சி வாரியாக பார்த்தால்,
டோலா சென், திரிணாமுல் காங்கிரஸ் - வர்த்தகம்
பிரகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, ராம் கோபால் யாதவ் - சுகாதாரத்துறை
திருச்சி சிவா, திமுக தொழிற்சாலைகள்
கனிமொழி கருணாநிதி, திமுக - நுகா்வோா் விவகாரங்கள்
பிரிஜ் லால், பாஜக - பணியாளர் நலன், சட்டம்
புவனேஷ்வர் கலிதா, பாஜக - அறிவியல் தொழில்நுட்பம்
சஞ்சய் குமார் ஜா, பாஜக - போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம்
சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் - வேளாண்
கீர்த்தி ஆசாத் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் - ரசாயனம், உரம்
பசவராஜ் பொம்மை, பாஜக - தொழிலாளர், ஜவுளி
தத்கரே சுனில் தத்தாத்ரே, தேசியவாத காங்கிரஸ் - பெட்ரோலியம் இயற்கை எரிவாயு
சப்தகிரி சங்கா் உலாகா, காங்கிரஸ் - கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ்
சி.பி. மோகன், பாஜக - சமூக நீதி, அதிகாரமளித்தல்
ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜக - நீர் வளம்
என துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications