Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75 ஆவது சுதந்திர தினவிழா: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்வின் போது முதல் முறையாக இந்திய விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின.

Recommended Video

    Independence Day 2021 Red Fort Celebration | Modi Flag Hoisting

    இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை அடுத்து தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள், அரசு அலுவலகங்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

    Tricolor Falg was hoisted by PM Narendra Modi ahead of 75 th Indepence day

    பொதுவாக செங்கோட்டையில் ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்வர். ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த நிகழ்வுகளுக்கு நிறைய பேரை அழைக்கவில்லை. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற 32 வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த 32 பேரில் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

    Tricolor Falg was hoisted by PM Narendra Modi ahead of 75 th Indepence day

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் இந்தியா சார்பில் வெல்லப்பட்டன. அது போல் கொரோனாவை தடுக்க அரும்பாடுபட்டு வரும் கொரோனா முன் கள பணியாளர்களுக்கென தனி இடம் செங்கோட்டையின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

    செங்கோட்டையில் கொடியேற்ற வரும் பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். ராணுவம் மற்றும் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

    Tricolor Falg was hoisted by PM Narendra Modi ahead of 75 th Indepence day

    பின்னர் தேசிய கொடிக்கு இந்திய ராணுவம், கடற்படை, விமான படை , டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகளும் 130 வீரர்களும் வீர வணக்கம் செலுத்தினர். தேசியக் கொடியை ஏற்றியவுடன் முதல் முறையாக விமான படைக்குச் சொந்தமான இரு மிக் 17 ரக ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின.

    ஒரு ஹெலிகாப்டரை விங் கமாண்டர் பால்தேவ் சிங் பிஷ்டும் இன்னொரு ஹெலிகாப்டரை விங் கமாண்டர் நிகில் மெஹ்ரோத்ராவும் இயக்கினார்கள். முன்னதாக ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+