"அச்சத்தால் வரலாற்றை மாற்றும் முயலும் அரசு.." மக்களவையை தெறிக்கவிட்ட திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா
டெல்லி: நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மஹுவா மொய்த்ரா, பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து விமர்சித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பிப்.1ஆம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்பிகள் பேசி வருகின்றனர். அதன்படி நேற்று மக்களவையில் பேசிய மஹுவா மொய்த்ரா, பாஜக அரசு வெளிப்பாடாகவே இந்திய வரலாற்றை மாற்ற நினைப்பதாக விமர்சித்தார்.

வரலாற்றை திரிக்கிறது
மக்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, "குடியரசுத் தலைவர் உரையில் பல்வேறு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால், வெறும் வாய் வார்த்தைக்காக மட்டுமே அவை இடம் பெற்றுள்ளது. உண்மையில் இந்தியாவின் பன்மைத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை அந்த அரசு பாதுகாக்கத் தவறுகிறது. எதிர்காலத்தைக் கண்டு அஞ்சும் இந்த அரசு, நிகழ்காலத்தையும் நம்பவில்லை.

பகத் சிங்
இதனால் வரலாறுகளைத் திரித்து வருகிறது. அதை மாற்ற நினைக்கிறது. ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றுகிறது. பாசிசத்தை எதிர்த்த பகத் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்த வல்லபாய் படேல் ஆகியோரை கையில் எடுத்துள்ள பாஜக அரசு, அவர்களின் வரலாற்றையும் கொள்கைகளையும் மாற்றி வருகிறது.

நேதாஜி
குடியரசுத் தலைவர் உரையில் பல இடங்களில் நேதாஜி குறித்துக் கூறப்பட்டிருந்தது. அனைத்து மதத்தினரிடமும் பாரபட்சமற்ற நடுநிலையான ஒரு அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியவர் அதே நேதாஜிதான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பாடப் புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தானின் வரலாற்றை இந்த அரசு அழிக்கிறது. ஆனால் அதே திப்பு சுல்தானின் புலி சின்னத்தைத் தான் நேதாஜி தனது இந்தியத் தேசிய ராணுவத்தின் சின்னமாக வைத்திருந்தார்.

முஸ்லிம் இனப்படுகொலை
நேதாஜி இன்று இருந்திருந்தால் முஸ்லிம் இனப்படுகொலைக்கான அழைப்பு விடுத்த ஹரித்வார் தரம் சன்சாத்தின் பேச்சை ஒப்புக் கொண்டிருப்பாரா? எதிஹாத், எட்மாட் மற்றும் குர்பானி ஆகிய மூன்று உருது வார்த்தைகள் தான் நேதாஜியின் ஐஎன்ஏவின் பொன்மொழிகள். ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் தியாகம் தான் இதன் ஆர்த்தம். ஆனால் அரசோ இதே உருது மொழியை நீக்கிவிட்டு ஜம்மு காஷ்மீரின் முதல் மற்றும் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியைக் கொண்டுவருகிறது.

உளவு பார்க்க
நாட்டிற்கு மாற்றம் தேவையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது. அதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. சொந்த குடிமக்களை உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை வாங்க மக்களின் வரிப் பணத்தையே பயன்படுத்திய ஒரே அரசு இதுதான். விவசாய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் பல முறை கூறியதைக் கேட்கவில்லை. இப்போது எதற்குத் திரும்பப் பெற்றுள்ளீர்கள் என அனைவருக்கும் தெரியும்!

குடியரசை அழிக்கிறது
80 சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் இடையிலான போர் என்று கூறி இந்த அரசு தொடங்கியுள்ள இது நமது குடியரசை அழிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 142வது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் அர்த்தம் இன்று பத்திரிகையாளர்களுக்கு உலகளவில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது" என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.

கோமியம்
முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தில் பேச உள்ளேன். கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்துவிடும் பாஜகவினர் உங்கள் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என்று என ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications