முத்தலாக் மசோதா.. மேலிட உத்தரவிற்காக காத்திருக்கும் அதிமுக எம்.பிக்கள்.. என்ன செய்வார்கள்?
இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக மாநிலங்களவை எம்.பிக்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி: இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக மாநிலங்களவை எம்.பிக்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முத்தலாக் மசோதா கடந்த வாரம் லோக் சபாவில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டது. தலாக் என்று மூன்று முறை சொல்லி பெண்களை இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறைக்கு எதிராக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதா இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் ராஜ்ய சபாவில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதா வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக மசோதா
இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதாவை அதிமுக மாநிலங்களவை எம்.பிக்கள் ஆதரிப்பார்களா, மாட்டார்களா என்று கேள்வி எழுந்து இருக்கிறது. மாநிலங்களவையில் அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாகும்.

பெரிய பலம்
மாநிலங்களவையில் பாஜகவிற்கு 73 பேர் பலம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 50 பேர் பலம் உள்ளது. அடுத்தபடியாக அதிமுகவிற்கு 13 பேர் பலம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவிற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும், இதற்கு எதிராக வாக்களிக்க போவதாகவும் தெரிவித்துள்ளது.

அதிமுக பேட்டி
இதனால் இன்று அதிமுக என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அதிமுக யாருக்கு ஆதரவாக செயல்படும் என்று கேள்வி எழுந்து இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, மாநிலங்களவையில் அதிமுக முத்தலாக்கிற்கு எதிராக வாக்களிக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் இதுகுறித்து அதிமுக சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முடிவு
இன்று அதிமுக தலைமையிடம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்று தகவல் வந்த பின்புதான், அதிமுக எம்.பிக்கள் செயலாற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதிமுக எம்.பிக்கள் யார் பக்கமும் நிலைப்பாடு எடுக்காமல் அவையைவிட்டு வெளிநடப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications