திரிபுராவில் காங். உடன் கூட்டணி அமைத்தும் இடதுசாரிகளுக்கு 3வது இடம் தானா? நிச்சயம் இது மரண அடி!
திரிபுராவை கால் நூற்றாண்டு ஆண்ட இடதுசாரிகள், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தும் 3-வது இடமே கிடைக்கும் என்கிறது பெரும்பாலான கருத்துக்கணிப்புகள்.
டெல்லி: திரிபுராவை கால் நூற்றாண்டு ஆண்ட இடதுசாரிகள், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தும் 3-வது இடமே கிடைக்கும் என்கிறது பெரும்பாலான கருத்துக்கணிப்புகள். அப்படி நடந்தால் நிச்சயம் கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய படுதோல்வியாகும்.
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் கடந்த 16-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
திரிபுரா மாநிலத்தில் பாஜக கடந்த 2018ம் ஆண்டு யாரும் எதிர்பாராதவிதமாக ஆட்சியை பிடித்தது. கால் நூற்றாண்டு ஆண்ட இடதுசாரிகள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தொடர்ந்து நான்கு முறை முதல்வராக இருந்த மாணிக் சர்காரின் ஆட்சிக்கு முடிவு கட்டி பாஜக ஆட்சியை பிடித்தது. தற்போது பாஜக சார்பில் மாணிக் சாகா என்பவர் முதல்வராக இருக்கிறார்.

பாஜக ஆட்சி
திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2018 தேர்தலில் திரிபுராவில் 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இங்கே மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே-மை ஆக்சிஸ் இந்தியா தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிளில் பாஜக 36 முதல் 45 இடங்களை கைப்பற்றும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் திப்ரா மோத்தா பார்டி என அழைக்கப்படும் டிஎம்பி கட்சி 9 முதல் 16 இடங்களில் வெற்றி பெறும் என கணித்துள்ளது.

எப்படி இருக்கிறது
Times Now-ETG Research வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, திரிபுரா: பாஜக 21-27 இடங்களிலும், என்பிபி 18-24 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவிற்கே வாய்ப்பு
ஜீ நியூஸ் - மெட்ரீஸ் நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜக 29-36 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. . இடதுசாரிகள் கூட்டணி 13-21 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெளியான மூன்று கணிப்புகளுமே திரிபுராவில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளன.

மாற்றிய பாஜக
இந்நிலையில் திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் கடந்த 2018ல் ஆட்சியை பறிகொடுத்தனர். அப்போது காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. பாஜக ஒரு அணியாகவும் , இடதுசாரிகள் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. காங்கிரஸ் இடதுசாரிகள் இணைந்து போட்டியிட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 55 தொகுதிகளிலும், ஐபிஎஃப்டி 5 தொகுதிகளிலும், இடது முன்னணி- காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சியும் களத்தில் இறங்கி இருக்கிறது.

படுதோல்வி
திரிபுராவில் பெரும்பான்மையான தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள், பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறியுள்ளன. இந்த தேர்தலில் திப்ரா மோர்ச்சா கட்சி இந்தத் தேர்தலில் முக்கியப் பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 2021 பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது இந்த கட்சி தான். டிஎம்பி என அழைக்கப்படும் திப்ரா மோர்ச்சா கட்சி எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என்றும், காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி 3வது இடத்தை தான் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளன. அப்படி ஒரு வேலை நடந்தால், நிச்சயம் கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய படுதோல்வியாகும். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இடதுசாரிகளுக்கு இது மரண அடியாக பார்க்கப்படுகிறது.
-
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா? -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications