திரிபுரா மத மோதல்.. தவறான தகவல் பரப்பிய 102 ட்விட்டர் பயனர்கள் மீது பாய்ந்தது 'உபா' சட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதவாத மோதல்கள் குறித்த பதிவுகளுக்காக 68 கணக்குகளை சஸ்பெண்ட் செய்யுமாறு ட்விட்டர் நிர்வாகத்தை திரிபுரா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

திரிபுராவில் நடந்ததாகக் கூறப்படும் இஸ்லாமியர்களின் தொழுகை ஸ்தலமான மசூதி அவமதிப்பு சம்மந்தமான சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் ட்விட்டரில் பரவியதாக அந்த மாநில அரசு குற்றம்சாட்டுகிறது.

இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்த 68 ட்விட்டர் பயனர்களை இனம் கண்டுள்ள திரிபுரா காவல்துறை, 68 கணக்குகளை சஸ்பெண்ட் செய்ய அமெரிக்காவிலுள்ள ட்விட்டர் தலைமையகத்தை அணுகியுள்ளது.

சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை

சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை

மேற்கு திரிபுரா மாவட்ட காவல்துறை நவம்பர் 3 தேதியிட்ட கடிதத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ட்விட்டரின் அதிகாரப்பூர்வ முகவரிக்கு, 68 பயோடேட்டாக்களின் இணைப்பைக் குறிப்பிட்டு கடிதத்தை அனுப்பியுள்ளது.

சித்தரிப்புகள்

சித்தரிப்புகள்

வேறு சில சம்பவங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் சித்தரிப்பு செய்யப்பட்டு திரிபுராவிலுள்ள மசூதி அவமரியாதைக்குள்ளானது போல அவர்கள் பரப்பினார்கள், மதக் குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே பகையை ஊக்குவிக்கும் வாசகங்கள் அதில் உள்ளன என்று, காவல்துறை எழுதிய அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதக் கலவரம்

மதக் கலவரம்

"இந்தப் பதிவுகள் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு மத சமூகத்தினரிடையே வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் வாய்ப்பை கொண்டவையாக உள்ளன. இது மதக் கலவரங்களுக்கு வழிவகுக்கும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வங்கதேச கலவரம்

வங்கதேச கலவரம்

பங்களாதேஷின் எல்லையை ஒட்டியுள்ளது திரிபுரா. இங்குள்ள முஸ்லீம்கள் தாங்கள் சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக பங்களாதேஷில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் தாக்கப்பட்டதாகவும், மோதலின் போது ஏழு பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, திரிபுராவிலுள்ள முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தன. முஸ்லீம்களின் மத வழிபாட்டிடங்கள் அல்லது தனிநபர்கள் மீது குறைந்தபட்சம் 15 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக ஜமியத் உலமாவின் திரிபுரா மாநில பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

உபா சட்டம்

உபா சட்டம்

பனிசாகரில் சமீபத்தில் நடந்த வன்முறை குறித்து தவறான தகவலை பரப்பியதாக 102 ட்விட்டர் கணக்குகளுக்கு எதிராக திரிபுரா போலீசார் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தை (யுஏபிஏ) பயன்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+