அம்மாடியோவ்..! யூடியூப்பில் வீடியோ போட்டு.. மாதம் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கும் லாரி டிரைவர்!
டெல்லி: யூடியூப் வீடியோ தளம் வெறும் பொழுது போக்கு தளம் மட்டும் இன்றி , பலருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக மாறியுள்ளது. கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும், வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் பதிவிட முடியும். இப்படி வீடியோ பதிவிட்டு லாரி டிரைவர் ஒருவர் தற்போது பல லட்சத்தில் வருமானம் ஈட்டி வருகிறார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மக்கள் மத்தியில் தற்போது யூடியூப் சேனல்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால், பொழுது போக்கிற்காக யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் பழக்கம் அனைவரிடமே உள்ளது. சமையல் குறிப்பு வீடியோ, சுற்றுலா, தையல் பயிற்சி வீடியோ, சிலம்ப பயிற்சி வீடியோ, போட்டித்தேர்வு படிப்பிற்கான வீடியோ என பல பயனுள்ள வீடியோக்களையும் சிலர் யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படி வீடியோ பதிவிடுபவர்களுக்கு கிடைக்கும் பார்வையாளர்களுக்கு ஏற்ப பணத்தையும் கொட்டி கொடுக்கிறது யூடியூப் நிறுவனம். இதனால், பலரும் தற்போது யூடியூப்பில் வீடியோக்களை போடுவதையே முழு நேர வேலையாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பல லட்சங்களில் வருமானம் ஈட்டுவதாகவும் கேள்வி படுகிறோம். சமையல், சுற்றுலா, பஸ் ரிவியூ என அவர் அவர்களுக்கு பிடித்த துறைகளில் வீடியோக்கள் பதிவிட்டு வருமானமும் ஈட்டுகிறர்கள்.
அந்த வகையில் தான், லாரி ஓட்டிக்கொண்டே தனது அனுபவத்தை வீடியோவாக பதிவிட்டு வரும் ரஜேஷ் ரவானி என்ற டிரைவர் யூடியூப்பில் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக பதிவிட்டு வருகிறார். இவரைப் பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ராஜேஷ் ரவானி பற்றிய விவரம் வருமாறு:-
25 ஆண்டுகளாக லாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் ரஜேஷ் ரவானி ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியை சேர்ந்தவர். இவருக்கு லாரி ஓட்டுவதன் மூலம் தினமும் ரூ.500 அளவில் தான் வருமானம் கிடைத்துள்ளது. இதனால் குடும்பம் நடத்த மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்த ராஜேஷ் ரவானிக்கு யூடியூப் சேனலில் வீடியோ போடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. லாரி டிரைவர் என்பதால் தினமும் புதுப்புது இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
இப்படி செல்லும் இடங்கள் குறித்தும் வீடியோ பதிவிடும் ராஜேஷ் ரவானி, சமையல் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்ய தொடங்கினார். லாரியில் தொலை தூரங்களுக்கு செல்லும் போது போகிற இடத்தில் லாரியில் வைத்தே தங்களுக்கு தேவையான உணவை லாரி டிரைவர்கள் சமைப்பதை பார்த்து இருப்போம். இப்படி சமைக்கும் போது அதையும் வீடியோவாக பதிவிட்டார் ராஜேஷ்.
இதில் பார்வையாளர்களும் அதிகம் கிடைக்க தொடங்கினர். யூடியூப்பில் அவரை 18 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அவரது வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் வியூஸ்கள் செல்கின்றன. மிகவும் பிரபலமான யூடியூபராக மாறியிருக்கும் ராஜேஷ் ரவானி, மாதம் 4 முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாக கூறியிருக்கிறார். பாட்காஸ்ட் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி ராஜேஷ் ரவானி கூறியிருப்பதாவது:-
முதலில் நான் முகத்தை காட்டாமல் வீடியோ பதிவிட்டு வந்தேன். பிறகு எனது மகன் கொடுத்த ஐடியாபடி எனது முகத்தை காட்டி வீடியோ பதிவிட தொடங்கினேன். இந்த வீடியோக்களுக்கு நல்ல வியூஸ் கிடைத்தது. அதிகபட்சமாக மாதம் ரூ.10 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளேன். மாதம் சராசரியாக ரூ.4 டூ 5 லட்சம் வருமானம் ஈட்டுகிறேன். தற்போது புதிதாக வீடு ஒன்றையும் கட்டி வருகிறேன். விபத்து ஒன்றில் சிக்கியதில் எனது கையில் அடிபட்டது.
இருந்தாலும் வருமானத்திற்காக லாரி ஓட்டிக்கொண்டே வருகிறேன். எனது மகனும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். வண்டி ஒட்டிக்கொன்டே நாங்கள் வீடியோ போடுகிறோம். எனது குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இதை என்னால் செய்து இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். லாரி டிரைவராக இருக்கும் ராஜேஷ் ரவானி, யூடியூப் சேனல் மூலம் மாதம் ரூ 5 லட்சம் சராசரியாக சம்பாதிப்பதாக கூறியிருப்பது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications