Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொல்லியடிக்கும் இந்தியர்கள்.. துருக்கி - அஜர்பைஜான் இதை எதிர்பார்க்கவே இல்லை.. மொத்தமும் போச்சே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் உள்ளன. இந்த 2 நாடுகளும் சுற்றுலா துறைக்கு பெயர் பெற்றவை. இதனால் இருநாடுகளையும் நம் நாட்டினர் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு செல்வதற்கான விசா விண்ணப்பங்கள் 42 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் கண்டித்தன. இதற்கு முக்கிய காரணம் 2 நாடுகளும் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவது தான். துருக்கி ட்ரோன் உள்பட முக்கிய ராணுவ தளவாடங்களை பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது.

turkey-and-azerbaijan-visa-applications-dropped-42-indian-tourists-opting-for-other-destinations

துருக்கியுடன், அஜர்பைஜான் நெருக்கம் காட்டி வரும் நிலையில் அந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. அதோடு நம் நாட்டை சீண்டி பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்து வருகிறது.

துருக்கி, அஜர்பைஜானை எடுத்து கொண்டால் இருநாடுகளும் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. நம் நாட்டில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமானவர்கள் இந்த 2 நாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகின்றனர். தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதால் Boycott Turkey மற்றும் Boycott Azerbaijan என்பது டிரெண்ட்டானது. இருநாடுகளுக்கும் நம் நாட்டு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் வலுத்தது.

இதையடுத்து கோடை கால சுற்றுலாவுக்கு துருக்கி, அஜர்பைஜான் செல்ல முடிவு செய்த மக்கள் தங்களின் பிளானை மாற்றி உள்ளனர். அதோடு முன்கூட்டியே இருநாடுகளுக்கும் செல்ல பிளான் போட்டவர்கள் அதனை ரத்து செய்து வருகின்றனர். இதனால் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு பேரிடி விழுந்துள்ளது. இந்நிலையில் தான் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கான விசா விண்ணப்பம் என்பது 42 வரை சரிவை சந்தித்துள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விசா புராசசிங் பிளாட்பார்மாக உள்ள 'அட்லிஸ்' வெளியிட்டுள்ள தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

துருக்கி, அஜர்பைஜான் செல்வதற்கான விசா விண்ணப்பங்கள் 42 சதவீதம் சரிந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும், இந்நாடுகளுக்கான விசா நடைமுறையிலிருந்து பாதியிலேயே வெளியேறியவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை துருக்கி, அஜர்பைஜானுக்கு செல்லும் இந்தியர்களின் விசா விண்ணப்பம் என்பது 64 சதவீதம் வரை அதிகரித்தது. இஸ்தான்புல், பாகு, கபடோசியா உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகமான மக்கள் செல்ல விரும்பினர். குறிப்பாக இளம் வயதினர்கள் இந்த நகரங்களை விரும்பினர்.

ஆனால் பாகிஸ்தான் உடனான மோதல் காரணமாக 25 வயது முதல் 34 வயது நிரம்பிய இளம்வயதினர் துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும் என்று இணையதளங்களில் டிரெண்ட் செய்தனர். . அதிகபட்சமாக டில்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் தான் விசா விண்ணப்பங்கள் 53 சதவீதம் சரிந்துள்ளன. இந்தூர், ஜெய்ப்பூர் போன்ற இரண்டாம் தட்டு நகரங்களில் 20 சதவீதம் சரிந்துள்ளது. தனி நபர்களைக் காட்டிலும், குழு விசா விண்ணப்பங்கள் தான் கணிசமாக குறைந்துள்ளன. இதனால் தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, எகிப்துக்கான விசா விண்ணப்பங்கள் 31 சதவீதம் அதிகரித்துள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் பெரும் இழப்பு என்பது ஏற்பட உள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டை ஒப்பிடும்போது துருக்கிக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை என்பது கிடுகிடுவென அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 3.3 லட்சம் பேர் நம் நாட்டில் இருந்து துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனால் நம் நாட்டை வைத்து துருக்கி வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையில் கல்லா கட்டுகிறது. ஆனால் விசுவாசத்தை மட்டும் பாகிஸ்தானுக்கு காட்டி வருவதால் பல்வேறு தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி கருத்து தெரிவித்தபோதே Boycott Turkey என்பது தொடங்கியது. இது இன்னும் முடியவில்லை. தொடரும் என்பதால் துருக்கியை நம் நாட்டு மக்கள் மொத்தமாக புறக்கணிக்க வாய்ப்புள்ளது. இது துருக்கியின் சுற்றுலா துறை மற்றும் அதை சார்ந்த வர்த்தகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+