‘ரெட்’ கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது ஆக்ஷன் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வாதம்!
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை இல்லை என வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது.
தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இது, பெரும் போராட்டமாக வெடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, தடை உத்தரவை நீக்கி மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்றும் வேதாந்தா தரப்பில் வாதிடப்பட்டது.
வேதாந்தா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தூத்துக்குடி சிப்காட் பரப்பளவு 1,800 ஏக்கர் என்றும், அதில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்கி வருவதாகவும், சிப்காட்டில் 67 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 27 நிறுவனங்கள் ரெட் கேட்டகிரியில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு லைசென்ஸ் புதுப்பிக்க விண்ணப்பித்தபோது அது கிடப்பில் போடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை செயல்படக்கூடாது என தமிழக அரசு தெரிவித்ததாகவும், வேதாந்தா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டின்போது, இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 36 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உற்பத்தி செய்ததாகவும், நாளொன்றுக்கு 1700 டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறனுடன் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது என்றும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வேதாந்தா தரப்பு வாதங்களை வைத்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications