மத்திய கேபினட் செயலாளராக டிவி சோமநாதன் நியமனம்.. கருணாநிதி டு மோடி வரை பணி! யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சரவை செயலாளர் பதவிக்கு, தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 1987 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், மத்திய அரசின் நிதித் துறை செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில் தற்போது, மத்திய கேபினட் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019 ஆகஸ்ட் 30 முதல் மத்திய அமைச்சரவை செயலாளராக பதவியில் இருந்த ராஜீவ் கௌபாவுக்கு பதிலாக, வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் மத்திய அமைச்சரவை செயலாளராக செயல்பட இருக்கிறார் டி.வி. சோமநாதன். இவர், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

Delhi Union government IAS

கருணாநிதியின் செயலர்: வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கியில் இளம் தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் மூலம் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய துணைத் தலைவர் பதவியில் நிதிப் பொருளாதார நிபுணராக இருந்தார் டி.வி. சோமநாதன்.

கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது முதல்வரின் செயலாளராக பணியாற்றியவர் டி.வி.சோமநாதன். தமிழக அரசின் துணைச் செயலாளர் (பட்ஜெட்), இணை விஜிலென்ஸ் கமிஷனர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர், முதலமைச்சரின் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் & வணிக வரி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் எம்.டி.யாக இருந்த சோமநாதன், ரூ.14,600 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப டெண்டர்களை வழங்குவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் முக்கிய நபராக இருந்தார்.

பின்னர், மத்திய அரசு பணிக்குச் சென்றார். கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். 2015 முதல் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் வரை மத்திய அரசுப் பணியில், அதாவது பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார்.

மீண்டும் மத்திய அரசு பணி: பின்னர், மாநில அரசுப் பணிக்கு வந்ததும் முதலில் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் செயலராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து வணிகவரித் துறை ஆணையராக பணியாற்றி வந்தார்.

தமிழக வணிகவரித் துறை ஆணையராக பணியாற்றி வந்த டி.வி.சோமநாதன், கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, மத்திய நிதித் துறையின் செலவின பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, நிதித்துறை செயலாளர் ஆனார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உருவாக்கங்களில் பெரும் பங்கு வகித்தார்.

மத்திய கேபினட் செயலர்: இந்நிலையில், தற்போது, மத்திய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் டி.வி. சோமநாதன். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இன்று டி.வி.சோமநாதனை இந்திய அமைச்சரவை செயலாளராக நியமித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் அவர் இந்த பதவியில் இருப்பார்.

டி.வி. சோமநாதன் நிதி சார்ந்த பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாக மேம்பாட்டு திட்ட டிப்ளமோ, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் இளங்கலை வணிகவியல் பட்டங்கள் பெற்றவர். பொருளாதாரம், நிதி, நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கை பற்றிய 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் கட்டுரைகளையும் கல்வி இதழ்களிலும், முன்னணி நாளிதழ்களிலும் வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+