சிபிஐ விசாரணை கேட்கிறோம்.. சிறப்பு புலனாய்வு விசாரணை எதுக்கு? உச்சநீதிமன்றத்தில் தவெக முறையீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விசாரிக்க, ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, உச்சநீதிமன்றத்தை தவெக நாடியுள்ளது.

நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியிருப்பதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

TVK Supreme Court Karur

கடந்த 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். விஜய்யை பார்க்க அதிக அளவில் மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு சீனா உட்பட இரங்கல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சம்பவம் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. தவெகவினர், திமுக மீது பழியை தூக்கி போட்டனர்.

நெரிசல் பலியில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதேபோல கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோரியும், அதற்கான விதிகளை வகுக்கக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தவெக மீதும் விஜய் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசுக்கு கேள்விகளை எழுப்பியிருந்தது.

மட்டுமல்லாது ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வு குழுவையும் அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த குழு, விசாரணையை தொடங்கியுள்ளது. கரூரில் நெரிசல் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்த காவலர்களிடம் முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் புதியதாக சில அதிகாரிகள் இணைக்கப்பட்டிருக்கின்றனர். விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தவெக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+