போலீஸ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன? எடுபடாத தவெக பதில்கள்! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போலீஸ் மீது தவெகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கான ஆதாரம்தான் என்ன? ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏன் முன்வைக்கிறீர்கள்? என்று தமிழ்நாடு அரசு சார்பில், கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் தவெக தரப்பு இதற்கு முறையான பதிலளிக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வு விசாரணை குழுமை தமிழக அரசு அமைத்திருந்தது. ஆனால், இந்த குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தவெக சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருக்கிறது.

TVK Supreme Court police

சிபிஐ விசாரணை வேண்டாம்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் வாதங்கள் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. விதிவிலக்கான வழக்கை தான் சிபிஐக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டும். இது அவ்வாறான ஒரு வழக்கு அல்ல எனவும் தமிழக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர், தமிழ்நாடு அரசு நெஞ்சில் ஈரம் இல்லாமல் வாதிடுகிறது முறையிட்டிருந்தார்.

திடீரென வழக்கு தொடுத்த தந்தை

உயிரிழந்த 41 பேரில் ரித்விக் என்கிற 9 வயது சிறுவனும் ஒருவர். அவரது தந்தை பன்னீர்செல்வம் சார்பில், சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் உயிரிழந்த சிறுவனை அவரது தாய்தான் வளர்த்து வந்திருந்தார். சிறுவனுக்கு 6 மாதம் இருக்கும்போதே தந்தை பன்னீர்செல்வம் குடும்பத்தை விட்டு போய்விட்டார் என்றும் தனி பெற்றோராக ரித்விக்கை வளர்த்து வந்ததாகவும் தாய் கூறியிருக்கிறார். இப்படி இருக்கையில் நாங்கள் யாரும் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை என்றும் கூறியிருக்கின்றார். ஆனால், திடீரென தந்தை பன்னீர்செல்வம் சார்பில் மனு தாக்கல் செய்திருப்பது, தவெக தூண்டுதலின் பெயரில்தான் நடந்தது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு தந்தை வந்திருக்கிறார் என தமிழக அரசு குறிப்பிட்ட நிலையில், தமிழக அரசு ஈரம் இல்லாமல் வாதிடுவதாக பன்னீர்செல்வம் வழக்கறிஞர் விமர்சித்திருந்தார்.

போலீஸ் மீது என்ன தவறு?

இதனையடுத்து தமிழக அரசு சார்பில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில் என்ன தவறு உள்ளது? ஒரு விசாரணை நடத்தப்படும்போது அதன் மீது, ஏதாவது முக்கியமான ஒரு ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றால், அல்லது விசாரணையில் தொய்வு இருக்கிறது என்றால் முன்னேற்றமும் இல்லை என்றால் சொல்லலாம். ஆனால் தமிழ்நாடு காவல்துறை விசாரணையில் என்ன தவறு உள்ளது? தவறை சுட்டிக்காட்ட முடியுமா? என்பதையும் தமிழக அரசு கேள்வியாக எழுப்பியிருந்தது.

எடுபடாத தவெக பதில்கள்

இதற்கு பதிலளிக்கும் விதமாக சகோதரியை இழந்தவரின் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "கூட்டம் அமைதியாக இருந்தபோது போலீசார் தடியடி நடத்தினர். கூட்டத்தில் நெரிசல் ஏற்பட போகிறது என்பதை போலீசை தவிர அனைவரும் அறிந்திருந்தனர். போலீசாரின் அலட்சியத்தால்தான் இந்த கோர நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கை போலீஸ் விசாரிக்க கூடாது" எனவும் அந்த சகோதரி இழந்தவருடைய தரப்பின் சார்பாக வாதிடப்பட்டது.

ஆனால் இந்த வாதங்களை மறுத்த தமிழக அரசு, சம்பவத்திற்கு காரணம் விஜய்தான், அவர் தாமதமாக வந்ததே காரணம் என்றும், காவல்துறை மீது தவறு இல்லை என அறிஞர்கள் பலரும் கூறியிருப்பதாகவும் தமிழக அரசு வாதங்களை முன்வைத்தது. இதனையடுத்து இந்த டாப்பிக்கை விட்டுவிட்டு, உடற்கூறாய்வு குறித்த சந்தேகங்களை தவெக வழக்கறிஞர்கள் கிளப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+