ஒரே வாரத்தில்.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த "இந்தியா".. உலக அரசியலே மாறுது.. இது நம்ம காலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கடந்த 1 வாரத்தில் செய்த 2 சம்பவங்கள் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. உலக அரசியலையே இது புரட்டி போடும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா எப்போதும் சர்வதேச அரசியலில் அணி சேரா நாடாகவே இருக்கும். ஆனாலும் இந்தியா எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் உலக அரசியலை மாற்றி இருக்கின்றன. அந்த வகையில் நடந்து வரும் ஜி 20 மாநாட்டிலும், நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா எடுத்த இரண்டு நிலைப்பாடுகள் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளன.

Two biggest moves from India in G20 Summit and Brics that will change the world politics

பிரிக்ஸ் மாநாட்டில் என்ன நடந்தது?: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். கடந்த 3 வருடங்களாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கூட்டம் இந்த முறை நேரடியாக தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.

ஜோஹென்ஸ்பர்க்கில் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன் ஜோஹென்ஸ்பர்க் சென்றார்.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபர் சிரில் ராமபோசா இன்று பிரிக்ஸ் கூட்டத்திற்கு பின் உரையாற்றினார். இன்று நடந்த உச்சிமாநாட்டின் முடிவுகளை அறிவிக்கும் போது புதிய உறுப்பினர் நாடுகளின் பெயர்களை அறிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும், கூட்டமைப்பை பெரிதாக்கும் விதமாகவும் இந்த உறுப்பினர் சேர்க்கை நடந்து உள்ளது. பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில்தான் தற்போது எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் குழுவில் சேர்த்து உள்ளது. இதன் மூலம் உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஆறு நாடுகள் பிரிக்ஸ் குழுவில் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும்.

புதிய பலம் அடையும்: இதனால் உலக அரசியல் மிகப்பெரிய அளவில் மாற்றம் அடையும். எண்ணெய் வள ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக நாடுகளை கட்டுப்படுத்துவதோடு பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை பிரிக்ஸ் நாடுகள் இனி கட்டுப்படுத்தும். முக்கியமாக பிரிக்ஸ் நாடுகளின் இந்த முடிவு மேற்கு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது.

ஆனால் பாகிஸ்தானை சேர்க்க கூடாது என்பதில் இந்தியா இதில் உறுதியாக இருந்தது. இதனால் கடைசியில் பாகிஸ்தானை சேர்க்கும் முடிவு கைவிடப்பட்டது. இதிலோ தொடக்கத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்குவதையே இந்தியா எதிர்த்தது. ஆனால் அதன்பின் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. கூடுதல் நாடுகள் இருக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு அது வலிமை சேர்க்கும் என்பதால் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

இந்தியா மாறும்: எண்ணெய் வள நாடுகள் இந்த குழுவில் இணைவது பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு. உதவும் அதேபோல் பாகிஸ்தான் இதில் சேர்த்துக்கொள்ளப்படாது என்று எடுக்கப்பட்ட முடிவும் இந்தியாவிற்கு சாதகமாக மாறி உள்ளது.

தற்போது எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் குழுவில் சேர்த்து உள்ளது. இதன் மூலம் உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஆறு நாடுகள் பிரிக்ஸ் குழுவில் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவிற்கும் இது சாதகமாக முடியும்.

கரன்சி: இதில் பிரிக்ஸ் கரன்சி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும் ஆலோசனை செய்யப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும்.

இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது.

எண்ணெய் வள ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக நாடுகளை கட்டுப்படுத்துவதோடு பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை பிரிக்ஸ் நாடுகள் இனி கட்டுப்படுத்தும். முக்கியமாக பிரிக்ஸ் நாடுகளின் இந்த முடிவு மேற்கு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்கா அதிர்ச்சி: இதில் தொடக்கத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்குவதையே இந்தியா எதிர்த்தது. ஆனால் அதன்பின் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. கூடுதல் நாடுகள் இருக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு அது வலிமை சேர்க்கும் என்பதால் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்த நிலைப்பாடு காரணமாக அமெரிக்காவும் அதிர்ச்சில் உள்ளது.

ஜி 20 மாநாட்டில் என்ன நடந்தது?: டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இன்று பிரதமர் மோடி ஆப்ரிக்க யூனியனை இந்த குழுவில் அறிமுகம் செய்து நிரந்தர உறுப்பினராக அறிவித்தார் . உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடுகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழு, ஆப்பிரிக்க யூனியனை தங்கள் உறுப்பினர்களில் ஒன்றாக சேர்த்து அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20ல் இணைந்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்து நாடு இல்லாத ஒரு கண்டம் இந்த குழுவில் இணைந்துள்ளது. பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக ஆப்ரிக்காவை இது புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னெடுப்பின் கீழ் ஆப்ரிக்கா இந்த குழுவில் இணைந்துள்ளது. இதன் மூலம் ஆப்ரிக்க நாடுகள் இந்தியாவை பாராட்ட தொடங்கி உள்ளன. இந்தியாவின் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்தியா கொண்டாட்டம்: இதன் மூலம் இந்தியாவை ஆப்ரிக்க நாடுகள், ஆப்ரிக்க தலைவர்கள் கொண்டாட தொடங்கி உள்ளன. இந்தியாவின் உதவியை இனி ஆப்ரிக்க நாடுகள் என்று மறக்காது என்று சொல்லும் அளவிற்கு இது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆபிரிக்க ஒன்றியம் ஏழு ஆண்டுகளாக முழு உறுப்பினராக வாதிடுகிறது என்று அதன் செய்தித் தொடர்பாளர் எப்பா கலோண்டோ ஏற்கனவே கூறி இருந்தார். இப்போது வரை, தென்னாப்பிரிக்கா மட்டுமே G20 உறுப்பினராக இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஆப்ரிக்காவின் கோரிக்கை நிறைவேறி உள்ளது.

காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, இடம்பெயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக ஆப்ரிக்கா இந்த குழுவில் அதிக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆப்ரிக்க கண்டத்தின் இளம் மக்கள்தொகை 1.3 பில்லியன் ஆகும். இது 2050 இல் இரட்டிப்பாகும். மொத்த பூமியின் மக்களில் நான்கில் ஒரு பங்கை ஆப்ரிக்க மக்கள் கொண்டிருப்பர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+